சித்தர்கள் மற்றும் ஜீவ சமாதி வழிபாடு பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

Published : Apr 26, 2026, 01:20 PM IST
mooku podi siddhar

சுருக்கம்

சித்தர் வழிபாடு என்பது உருவங்களைக் கடந்து, தங்களுக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்ந்த ஞானிகளைப் போற்றும் மரபாகும். இவர்கள் இயற்கையோடும், பிரபஞ்ச ஆற்றலோடும் ஒன்றிணைந்து மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள். சித்தர்கள் உடலைத் துறந்தாலும், அவர்களின் உயிர் ஆற்றல் சமாதி பீடங்களில் அதிர்வுகளாக எப்போதும் நிறைந்திருக்கும்.

"சித்தன் போக்கு சிவன் போக்கு" என்பார்கள். சித்தர்கள் என்பவர்கள் வெறும் சாமியார்கள் அல்ல; அவர்கள் இந்த மண்ணின் ஆதி விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் ரசவாதிகள். மரணத்தை வென்று, உடலை ஒளியாக மாற்றி இன்றும் நம்மிடையே உலவி வரும் சித்தர்களின் ரகசிய உலகையும், அவர்களின் 'ஜீவ சமாதி' வழிபாட்டில் இருக்கும் அறிவியலையும் இங்கே விரிவாகக் காண்போம்.

சித்தர்கள் மற்றும் ஜீவ சமாதி வழிபாட்டு ரகசியம் :

1. யார் இந்த சித்தர்கள்?

எட்டு விதமான மகா சித்திகளை (அஷ்டமாசித்திகள்) கைவரப் பெற்றவர்களே சித்தர்கள். அவர்கள் நினைத்தால் அணுவை விடச் சிறியதாக மாற முடியும் (அணிமா), நினைத்த இடத்திற்கு நொடிப் பொழுதில் செல்ல முடியும் (லகிமா). 18 சித்தர்கள் என்பது ஒரு முதன்மையான கணக்கு என்றாலும், தமிழ் மண்ணில் பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் (அல்லது மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்). இவர்கள் மரணத்தை வென்றவர்கள் என சொல்லப்படுகிறது.

2. ஜீவ சமாதி: மரணமா அல்லது ஆழ்ந்த தியானமா?

பலரும் நினைப்பது போல ஜீவ சமாதி என்பது ஒரு கல்லறை அல்ல. ஒரு சித்தர் தனது உடலின் இயக்கத்தைத் தானே நிறுத்தி விட்டு, ஆன்மாவை மட்டும் உடலில் நிலைநிறுத்தி, பல நூறு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஒரு 'சூப்பர் மெடிட்டேஷன்' நிலைக்குச் செல்வதே ஜீவ சமாதி. அறிவியல் உண்மை: ஜீவ சமாதிகளில் இன்றும் ஒருவிதமான அதிர்வுகள் (Vibrations) இருப்பதை நவீனக் கருவிகள் உறுதி செய்கின்றன. அந்த இடத்தில் உள்ள அணுக்கள் மிக மெதுவாகச் செயல்படுகின்றன. அதனால் தான் அந்த இடங்களில் நுழையும் போது நமக்குள் ஒரு இனம் புரியாத அமைதி கிடைக்கிறது. அதிலும் பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்வது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

3. பலரும் அறியாத சித்தர்களின் 'ரசவாதம்' :

சித்தர்கள் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்றும் ரசவாதம் அறிந்தவர்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதன் உண்மையான பொருள் என்னவென்றால், 'இரும்பு போன்ற மனித மனதை, தங்கம் போன்ற தூய ஆன்மாவாக மாற்றுவது' தான் அந்த ரசவாதம். அவர்கள் பயன்படுத்திய 'முப்பு' எனும் மருந்து இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது. அதே போல் நவபாஷாணம் எனப்படும் ஒன்பது விதமான மிக கொடிய விஷத்தன்மை கொண்ட பொருட்களை ஒன்றிணைத்து, அவற்றை மிகக் கடுமையான நோய்களை குணமாக்கும் மருந்தாக மாற்றும் ரகசிய மருத்துவ முறைகளிலும் கை தேர்ந்தவர்கள் தான் சித்தர்கள்.

4. ஜீவ சமாதி வழிபாட்டின் பலன்கள் :

ஏன் மற்ற கோயில்களை விட ஜீவ சமாதிகளுக்குச் செல்ல வேண்டும்? என பலரும் கேட்பது உண்டு.

நேரடித் தொடர்பு: ஒரு தெய்வச் சிலைக்கு நாம் செய்யும் பிரார்த்தனையை விட, ஒரு ஜீவ சமாதியில் அமர்ந்து செய்யும் பிரார்த்தனை விரைவாகச் சென்றடையும். ஏனெனில், அங்கு அந்தச் சித்தரின் ஆன்மா உயிர்ப்பு சக்தியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

மன அழுத்தம் நீங்குதல்: தீராத மன உளைச்சலில் இருப்பவர்கள் ஒரு சித்தர் சமாதியில் 20 நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தால், அவர்களின் மூளை அலைகள் சீரடைவதை உணரலாம்.

5. சித்தர் ஜீவசமாதி வழிபாட்டு முறை:

ஜீவ சமாதிக்குச் செல்லும் போது வெறும் கைகளோடு செல்வதை விட, அந்தச் சித்தருக்குப் பிடித்தமான மணம் மிக்க மலர்கள் (மல்லிகை, மரிக்கொழுந்து) அல்லது சுத்தமான விபூதி கொண்டு செல்வது சிறப்பு. சமாதியின் மீது தலையை வைத்து வணங்குவதை விட, அந்த அதிர்வுகள் நம் முதுகுத் தண்டுவடத்தில் படுமாறு நேராக நிமிர்ந்து அமர்ந்து தியானம் செய்வது அதிக ஆற்றலைத் தரும். அங்கு எரியும் விளக்கில் தீபம் ஏற்றுவது உங்கள் வாழ்வின் இருளை நீக்கும் என்பது ஐதீகம். எதுவும் வாங்கிச் செல்ல முடியாவிட்டாலும், அந்த சித்தரை மனதார நினைத்து, குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது அங்கு அமர்ந்து தியானம் செய்து விட்டு வருவதும் கூட நல்ல மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்தும்.

6. தமிழ்நாட்டின் முக்கிய ஜீவ சமாதிகள் :

பழனியில் போகர், திருவாடுதுறையில் திருமூலர், சென்னையில் பட்டினத்தார், திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள், சதுரகிரி, சிதம்பரம், திருவண்ணாமலை எனத் தமிழகமே சித்தர்களின் கோட்டையாகத் திகழ்கிறது. குறிப்பாக சதுரகிரி மலை மற்றும் கொல்லிமலை போன்ற இடங்கள் இன்றும் சித்தர்களின் 'தலைமையகமாக' விளங்குகிறது.

சித்தர்கள் தேடி அலைந்த தங்கம் காடுகளில் இல்லை, அது நமக்குள் இருக்கிறது. ஜீவ சமாதி வழிபாடு என்பது ஒரு சடங்கு அல்ல; அது நம்மை நாமே உணர்ந்து கொள்ள உதவும் ஒரு நுழைவாயில். அடுத்த முறை ஒரு ஜீவ சமாதிக்குச் செல்லும் போது, வேண்டிக் கொண்டு மட்டும் வராமல், அங்கு நிலவும் அமைதியை மனதார உணர்ந்தால்... உங்கள் வாழ்க்கை மாறும்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்