நந்தியே இல்லாமல் இருக்கும் லிங்கம்.. எங்கு தெரியுமா?

By Dinesh TGFirst Published Oct 30, 2022, 5:28 PM IST
Highlights

நந்தி தேவர் தான் சிவபெருமானிடம் இருந்து சிவா கமத்தை நேரடியாக பெற்று இந்த உலகத்திற்கு அருளியவர். இப்படி சிவபெருமானிடம் இருந்து நந்தி பெற்ற உபதேசத்தை சனற்குமார் பெற்றார்

நந்தி தேவர் தான் சிவபெருமானிடம் இருந்து சிவா கமத்தை நேரடியாக பெற்று இந்த உலகத்திற்கு அருளியவர். இப்படி சிவபெருமானிடம் இருந்து நந்தி பெற்ற உபதேசத்தை சனற்குமார் பெற்றார். பின் இவரிடமிருந்து சத்திய ஞானதரிசினிகள் பெற, இவர்களிடமிருந்து பரஞ்சோதியார்கள் பெற்றார்கள். தொடர்ந்து இவர்களிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றார்கள் என்று கூறப்படுகிறது.

பொதுவாக சிவ பெருமானின் ஆலயங்களில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க முடியும். எப்போதுமே நந்தி பகவான் தனது ஒரு காலை மட்டும் தூக்கியபடி லிங்கத்திற்கு முன்பாக தரிசனம் தருவார். காரணம் நாமும் நந்தி பகவான் போன்று ஒருமித்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக சிவபெருமானை வணங்கும் போது சிவனிடம் நம் கவனம் இதுபோன்று இருத்தல் வேண்டும்.

எப்போதும் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் பிரதோஷ காலங்களில் செய்யப்படும் அபிஷேகம் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி எல்லா சிவபெருமானின் வழிபாடுகளிலும், ஆலயங்களிலும் முக்கிய பங்காற்றி வரும் நந்தி ஒரேயொரு சிவாலயத்தில் மட்டும் இல்லை என்பது ஆச்சரியமே.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் பகுதியில் நந்தி இல்லாமல் லிங்கம் மட்டுமே காணப்படும் பஞ்சவதி கபாலீஸ்வரர் மகாதேவ் என்கிற ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு புராணக்கதை உள்ளது. அதுபோன்று தான் இந்த கோவிலுக்கும் ஒரு புராணக்கதை உள்ளது. 

சிவ பெருமானிற்கும், பிரம்மனிற்கும் ஒருமுறை வாக்குவாதம் நடந்தது. அதாவது பிரம்மனின் நான்கு தலைகள் வேதங்களை ஓதியபடி இருக்க ஒரு தலை மட்டும் சிவபெருமானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது. பொறுத்து பொறுத்து பார்த்த சிவபெருமான் ஒரு கட்டத்திற்கு மேல், பிரம்மனின் வாக்குவாதத்தால் பெரும் கோபத்திற்கு ஆளானார். இதனால் சிவபெருமானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரம்மனின் அந்த ஒரு தலையை மட்டும் கொய்து எடுத்து விட்டார்.

பித்ரு தோஷம் இருப்பதை எப்படி கண்டறிவது ? பரிகாரம் என்ன?

இந்த உலகத்தில் யார் என்ன தவறு புரிந்தாலும், தோஷம் ஏற்படும். அதுபோன்று தான் சிவபெருமானிற்கும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
தோஷம் அடைந்த சிவபெருமான் இதனை போக்குவதற்காகவும், பரிகாரத்திற்காகவும் பூலோகம் வந்தார். மூவுலகத்திற்கும் சுற்றிய சிவனுக்கு பாவ விமோசனம் கிடைக்காமல், களைப்பில் சோமேஸ்வர் என்ற இடத்தில் அமர்ந்தார்.

அந்த இடத்தில் ஒரு பசு, அதன் கன்றுடன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டார். அதாவது அந்த கன்று தனது கொம்பால் ஒருவரை கொன்றதால், பிரம்மஹத்தி தோஷம் பெற்றிருந்தது. அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்று பசு சொல்லிக் கொண்டிருந்தது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவபெருமான் பசு மற்றும் கன்றை பின்தொடர்ந்தார்.

இந்தியாவில் உள்ள அனுமனின் முக்கிய 10 கோவில்கள்

அப்போது பஞ்சவதி அருகில் வந்ததும் கோதாவரி ஆற்றில் கன்று நீராடி பாவத்தை போக்கியது. கன்றை போலவே சிவபெருமானும் ஆற்றில் நீராடி பாவத்தை போக்கினார். பின்னர் அருகில் இருந்த மலையில் குடிகொண்டார். சிவபெருமானை கண்ட பசு அவரை பின்தொடர்ந்து அவரின் முன் சென்று அமர முயற்சி செய்த போது, சிவபெருமான் அதனை மறுத்து விட்டார். எனது பாவத்தை நீக்க காரணமாய் இருந்தால் நீ குருவிற்கு சமம் என்று கூறினார். இதனால் தான் இங்கு மட்டும் நந்தி இல்லாமல் சிவபெருமான் உள்ளது.

 அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தோஷம் செய்திருப்போமோ என்னும் ஐயம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் பஞ்சவதி  வந்து கோதாவரி ஆற்றில் நீராடி பஞ்சவதி லிங்கனை தரிசியுங்கள். 

click me!