வேத மந்திரகளுக்கு மொழிகளை விட அவை ஒலிக்கும் ஒலிகளுக்குத் தான் முக்கியத்துவம் அதிகம்.
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு மந்திரமும் புனிதமான வார்த்தைகளான தொகுப்பு ஆகும். மந்திரங்கள் வேதப் பாடல்களின் ஒரு பகுதி என்று சொல்லலாம். மேலும் இது வேதங்களில் சம்ஹிதா என்ற பிரிவில் காணப்படும். இதில் குறிப்பிட்ட சில மந்திரங்கள் குறிப்பிட்ட மீட்டரில் எழுதப்பட்டன மற்றவை உரைநடை போல எழுதப்பட்டது. வேத மந்திரகளுக்கு மொழிகளை விட அவை ஒலிக்கும் ஒலிகளுக்குத் தான் முக்கியத்துவம் அதிகம்.
ஒரு மந்திரத்தை நாம் பாடும்போது அதை உச்சரிக்கும் வகை மற்றும் வழிப்பாட்டு முறைகளுக்கான விதிகளை வேதங்கள் போன்ற சாஸ்திரப்படி கடைப்பிடித்து மந்திரங்களை பக்தியுடன் சரியான நோக்கத்துடன் பாடும்போது மந்திரத்தின் சக்தி அதிகரித்து அதை உரிய கடவுளிடன் நமது பிரார்த்தனையை சேர்ப்பதாக நம்பப்படுகிறது.
undefined
நாம் சொல்லும் மந்திரத்தின் பலன் வழிப்பாட்டுடன் இருந்தால் . அதை திரும்ப திரும்ப உச்சரிக்கும்போது அதற்கேற்ப பலன்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. உண்மையில் மந்திரங்களை சரியாக உச்சரித்தால் கடவுள் மகிழ்ந்து நமது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பார். உச்சரிப்பு தவறாக இருந்தால் அது கடவுளுக்குக் கோபத்தை உண்டாக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சிலர் மந்திரங்களை ஒரு வகையான தெய்வீகமாக நினைக்கிறார்கள். அது உண்மை தான். வேதத்தில் கூறப்பட்டபடி அதை சரியாக உச்சரித்தால் நாம் அழைக்கும் கடவுள் மந்திரத்தின் ஆற்றலால் மந்திரத்தின் கட்டாயப்படி பதிலளிப்பார்.
இன்னும் சிலர் கடவுளை விட மந்திரங்களை மிகவும் சக்திவாய்ந்ததாக நினைக்கிறார்கள். மந்திரம் ஒரு இரகசிய சக்தியாக இருந்தாலும் அதை உச்சரிப்பவரின் கர்மவினை, தெய்வத்தின் சித்தம் போன்றவையே அதற்கான பலன்களை அளிக்கலாம்.
ருத்ராட்சம் எத்தனை முகங்கள் உண்டு.. முதல் நான்கு வகைகள் பற்றி அறிவோம்!
உபநிஷதங்கள் ஒரு தனிமனிதருக்கு தனக்கு ஏற்படும் ஆசையை விட பொறுப்பான தியானங்களையும் தியாகங்களையும் மேற்கொள்ள பரிந்துரைக்கிறது. அதற்கான பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் அதை இறைவனிடம் ஒப்படைக்கவே வலியுறுத்துகிறது.
மந்திரங்கள் கேட்கப்படும் போது அவை பிரம்மனின் வலிமையை வெளிப்படுத்தும். செவி வழி வெளிப்பாடுகளின் பிரம்மனின் பல பகுதிகளை அடையாளம் காட்டுகிறது. பிரம்மன் மந்திரம் கேட்பவர்களை அவர்கள் நினைத்து வழிப்படும் தெய்வத்திடமே கூட்டிசெல்கிறார். மந்திரங்களை சத்தமாக திரும்ப திரும்ப சொல்வதால் அவறை சொல்பவருக்கும் தெய்வத்திற்க்கும் உள்ள தொடர்பை மேலும் ஊக்குவிக்கிறது என்கிறது.
வேத பாசுரங்கள் கூற்றுப்படி பிரம்மன் தான் அனைத்து யாகங்களையும் இறுதியாக பெறுபவர் ஆவர். சோம யாகம், குதிரை யாகம் அல்லது பிற உயர்வான யாகங்களை செய்யும் போது பல பூசாரிகள் ஒன்று அல்லது மேற்பட்ட வேதங்களில் இருந்து ஒரே நேரத்தில் நிறைய கடவுள்களை பாடி அழைக்கிறார்கள்.
துளசி செடி வீட்டில் வைப்பதற்கான காரணம் தெரியுமா?
இந்த சமயத்தில் பாடும் சத்தம் அதிகமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு மந்திரத்தின் தொடக்கம் அல்லது முடிவு ஓம், ஹிம், ஹ்ரீம், ஸ்வாஹா என்று இருக்கும். ஒவ்வொரு தியாகத்திலும் மூன்று பகுதி உள்ளது. அவை தொடக்கம், நடுத்தரம், முடிவு. தியாகங்களை நல்லபடியாக முடிக்க பூசாரிகள் வேதப் பாடல்களை பாடுகிறார்கள்.
அவ்வாறு போடும் சத்தத்தின் அதிர்வலைகள் பூமிக்கும் வானத்திற்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக சென்று கடவுளை எழுப்பி பக்தர்களிடம் இறங்கிவர உதவுகிறார்கள்.
தியாகங்களில் செய்யப்படும் போது அங்கே ஒலிக்கும் இசை சங்கீதம் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அங்கே வைக்கப்படும் யந்திரம் மற்றும் தந்திரங்களே அங்கு அதிக முக்கியத்தன்மை வாய்ந்தவை. இந்த யந்திரங்களும் தந்திரங்களும் என்ன செய்யும் தொடர்ந்து பார்க்கலாம்.