ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுபாளையம் பசுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒரு குடிசையில் சாய்பாபாவின் சிலையை வைத்து தினமும் வழிபாடு செய்து தம்மால் இயன்ற நபர்களுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார்.
இந்த நிலையில், அதே இடத்தில் புதிதாக ரூ.50 லட்சம் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. சுமார் 8 அடியில் பளிங்கு கல்லால் செய்யப்பட்ட ஷீரடி சாய்பாபா சிலை கருவறையினுள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்த நிலையில், ஒருசிலர் தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது கருவறையில் இருந்த 8 அடி உயர சாய்பாபா சிலை திடீரென வீடியோவில் மறைந்து இருந்தது.
நத்தம் அருகே கோவில் திருவிழாவில் போட்டி போட்டு வழக்கு மரம் ஏறிய இளைஞர்கள்
பின்னர் மீண்டும் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களில் பாபாவின் சிலை இருந்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தேனியில் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு பெண் கொடூர கொலை; காவல்துறை விசாரணை