கனவில் பல்லி வருவது அவ்வளவு நல்ல சகுனம் அல்ல..!!

By Dinesh TG  |  First Published Dec 13, 2022, 8:06 PM IST

கனவில் பல்லிகளைப் பார்ப்பது நல்ல சகுனமாக கருதப்படுவது கிடையாது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
 


பூமியில் பலநூறு ஆண்டுகளாக வசிக்கும் ஊர்வன விலங்குகளில் பல்லிகளும் ஒன்றாகும். வனப்பகுதிகள், பொதர்கள், மரங்களில் மட்டுமில்லாமல் மனிதர்கள் வசிக்கும் வீடுகளிலும் பல்லிகள் சகஜமாக காணப்படுகின்றன. வீட்டிற்குள் காணப்படும் ஆபத்தானவை இல்ல என்றாலும், பெரும்பாலான மக்களுக்கு அதை பார்த்தால் அருவருப்பாக இருக்கும். சுவற்றில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகள் தன் மீது விழுந்துவிடுமோ என்கிற எண்ணத்தில் மீதமுள்ளவர்கள் இருப்பார்கள். அதற்கு காரணம் நமது சாஸ்திரத்தில் காணப்படும் நம்பிக்கைகள் தான்.

பல்லி எந்நேரத்தில், உடலில் எப்பகுதிகளில் விழுகிறது என்பதன் அடிப்படையில் சகுனங்கள் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. அதுபோல கனவில் பல்லிகள் தென்பட்டால் அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. ஒருவர் எழுந்த பிறகும் கூட கனவுகள் வரும். தங்கள் கனவுகளை நினைவில் வைத்திருக்கும் மக்கள் அதன் அர்த்தத்தை அறிய ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு கனவுக்கும் விளக்கம் உள்ளது. இந்த கனவுகள் எதிர்கால நிகழ்வுகள் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. னவில் மீண்டும் மீண்டும் பல்லியைக் கண்டால், அது ஒரு தீய அறிகுறியாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

சுவற்றில் பல்லி

ஒரு பல்லி சுவரில் ஒட்டிக்கொண்டு உங்கள் மீது பாய்வதற்கு தயாராக இருப்பதாக நீங்கள் கனவு கண்டால், எதிர்வரும் நாட்களை மிகவும் கவனத்துடன் கடக்க வேண்டும் என்று அர்த்தம். அதாவது உங்களுக்கு யாருக்காவது எதிரி இருந்தால், அவருடைய சூழ்ச்சியில் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதை முன்னறிவிக்கவே பல்லிகள் கனவில் வருவதாக நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த நடவடிக்கையையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டியது முக்கியமாகும்.

வீட்டின் இந்த திசை மட்டும் எப்போதும் காலியாக இருக்க வேண்டும்- காரணம் இதுதான்..!!

பூச்சிகளை சாப்பிடும் பல்லி

பூச்சிகளை உண்ணும் பல்லி கனவில் வருவது நல்ல சகுனம் கிடையாது. அப்படிப்பட்ட கனவை நீங்கள் கண்டால், உங்கள் வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்படவுள்ளது என்று பொருளாகும் அல்லது ஏதாவது நிதி சிக்கலில் நீங்கள் அகப்படலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், உங்கள் கனவில் ஒரு குழந்தை பல்லி தோன்றினால், உங்கள் வேலையில் ஒருவித இடையூறு ஏற்படும் என்று அர்த்தம்.

வீட்டுக்குள் பல்லி நுழைந்தால்

உங்கள் கனவில் ஒரு பல்லி வீட்டிற்குள் நுழைவதை நீங்கள் கண்டால், நீங்கள் சில பெரிய உள்நாட்டு பிரச்சனைகளில் சிக்குவீர்கள் என்று அர்த்தமாகும். அதேசமயத்தில் ஏதாவது ஒரு பல்லியை கொல்வது போல பார்ப்பது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. அதையடுத்து உங்கள் கஷ்டங்கள் நீங்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பல்லியை சாப்பிடும் பல்லி

உங்கள் கனவில் ஒரு பல்லியை மற்றொரு பல்லி சாப்பிடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு பண வரவு நடக்கப்போவதாக பொருளாகும். ஆனால் அந்த பணம் சட்டவிரோதமாக குறிப்பிட்ட நபருக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒரு நபர் வேறொருவரின் உழைப்பிலிருந்து பணம் பெறுவது ஆபத்தானது தான். இந்த சூழ்நிலையை சமாளிப்பதை பொருத்து, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

click me!