திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்… விண்ணை முட்டும் பக்தர்களின் அரோகரா முழக்கம்!!

By Narendran SFirst Published Dec 6, 2022, 6:15 PM IST
Highlights

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 27ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் தேரோட்டம், சுவாமி வீதி உலா என இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் தேர் பவனி நடைபெற்றது.

இதையும் படிங்க:  மதுரை அழகர் கோவிலின் கழுகுப் பார்வை காட்சி! ஆஹா அற்புதம்!

 அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 03.45 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவில் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி வேத தந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை!

அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என்று முழக்கம் எழுப்பினர். இதை அடுத்து இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு தீபம் ஏற்றப்படும். 

click me!