நிதி நெருக்கடியை சரிகட்ட கிராம்பு, கற்பூரம் இருந்தால் போதும்..!!

By Dinesh TG  |  First Published Dec 2, 2022, 5:17 PM IST

வாஸ்து சாஸ்திரத்தில் பண இழப்பைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பின்பற்றினால் பணப் பிரச்னை நீங்கும். அந்த வகையில் கிராம்பு மற்றும் கற்பூரத்தின் பயன்பாடுகள் குறித்து வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மைகளை விரிவாக பார்க்கலாம்.
 


வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி கட்டப்படாத வீடு, ஒருபோதும் மங்களகரமானதாக இருக்காது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவேளை அப்படிப்பட்ட வீட்டில் வசிக்க நேர்ந்தால், அங்கு வாழ்பவர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் குலைந்து வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது. எனினும் வாஸ்து தோஷங்களைப் போக்க பல்வேறு வழிகள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றினால், தோஷம் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அதுபோன்ற ஒரு பரிகாரம் தான் கிராம்பு மற்றும் கற்பூரத்தை வைத்து செய்யப்படுகிறது. ஒருவேளை நீங்கள் வாஸ்து தோஷம் கொண்ட வீட்டில் வசித்து வந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைச் செய்து பாருங்கள். இதன்மூலம் பண இழப்பு ஏற்படாது. இதனுடன், நிதி வளமும் நிலைத்திருக்கும்.

சமையலறையில் கிராம்பும் கற்பூரமும்

Tap to resize

Latest Videos

உங்களுடைய வீட்டில் நிதி நெருக்கடி இருக்கும்பட்சத்தில், வீட்டில் சமையலறையில் ஒரு பாத்திரத்தில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை வைத்து, காலை மற்றும் மாலையில் எரித்து வரவும். இதன்மூலம் பணப் பிரச்னைகள் நீங்கும். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கான வாஸ்து கூறும் முக்கிய பரிகாரங்களில் இதுவும் ஒன்றாகும்.

புத்தாண்டில் பணக் கஷ்டம் தொடராமல் இருக்க இதைச் செய்யுங்க போதும்..!!

பூஜையில் ரோஜாவும் கற்பூரமும்

முறையாக கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வராமல் இருப்பது, உங்களுடைய பணம் வேறு எங்காயாவது சிக்கிக் கொண்டு இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால், சிவப்பு ரோஜாவில் சில கற்பூரத் துண்டுகள் மற்றும் சில கிராம்புகளை வைத்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்யுங்கள். இப்படி செய்தால் உரிய பணத்தை சீக்கரம் மீட்டுவிடலாம், விரைவில் பணம் திரும்ப கைக்கு வந்து சேரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

ஆரத்தி காட்டுங்கள்

மாலை நேரத்தில் லட்சுமித் தேவி படத்துக்கு தினமும் ஆரத்தி காட்டி வரவேண்டும். இதன்மூலம் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்கும், வீட்டுக்கு லட்சுமி தேவியின் ஆசியும் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் 5 கிராம்பு, சில கற்பூரம் மற்றும் ஏலக்காய்களை எரிக்கவும். அதன் பிறகு அதன் புகையை வீட்டின் அனைத்து அறைகளுக்கும், வழிபாட்டுத் தலத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள். அதிலிருந்து வரும் புகை எதிர்மறை ஆற்றலை அழித்து நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. அதன்மூலம் வாழ்வில் நன்மை ஏற்படும்.
 

click me!