Sarabeswarar Pooja : விதியையும் மாற்றுவார் சரபேஸ்வரர்! வழிபாடும் முறை இதுதான்!

By Dinesh TGFirst Published Sep 12, 2022, 8:30 AM IST
Highlights

இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். இவரின் சக்தி அளவிட முடியாதது. எதிரிகளாால் ஏற்படக் கூடிய பிரச்னைகள், பில்லி, சூன்யம், ஏவல் பிரச்னைகள், தீராத நோய்கள் எல்லாவற்றையும தீர்த்து வைப்பார் இவர். எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு.

இரணியன் அசுரர் குல தலைவன். கடும் தவம் புரிந்தான். “தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது” என்று கடவுளிடம் அரிய வரம் பெற்றான்.

எதிர்ப்பார் யாருமில்லாததால் தன்னையே கடவுள் என்றான். என்னையன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று குடிமக்களுக்கு உத்தரவிட்டான். இரணியனுக்கு மகனாய் பிறந்தவன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவரால், நாராயண உபதேசம் பெற்று, கருவிலே திருவானான்.

சதாசர்வ காலமும் நாராயண நாமத்தை உச்சரித்த பிரகலாதனைப் பார்த்து பெற்ற தந்தையான இரணியன் எரிச்சலுற்றான். அடங்காத ஆத்திரம் கொண்டான். மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழிக்க முயன்றான். பரந்தாமன் அருளால் எல்லாவற்றிலும் இருந்து தப்பிய பிரகலாதனிடம், ‘‘எங்கே உன் நாராயணன், அவனை எதிரே வரச்சொல். அவனைக் கொன்றுவிட்டு உன்னைக் கொல்கிறேன்’’ என்று கர்ஜித்தான். “என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று பதிலளித்தான் பிரகலாதன்.

Time to Pray : இறைவனை எப்போது வணங்க வேண்டும்.. குறிப்பிட்ட நேரம் என்று ஒன்று உண்டா

உடனே இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில், எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் ஆக்ரோஷமானார். அண்ட சராசரங்களும் கண்டு நடுங்கின. பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.

இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். இவரின் சக்தி அளவிட முடியாதது. எதிரிகளாால் ஏற்படக் கூடிய பிரச்னைகள், பில்லி, சூன்யம், ஏவல் பிரச்னைகள், தீராத நோய்கள் எல்லாவற்றையும தீர்த்து வைப்பார் இவர். எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு.

Siddhas : சித்தர்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா??

ஸ்ரீ சரபேஸ்வரர் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரமாகும். சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் முன் உள்ள தூண் ஒன்றில் சரபேசுவரரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இவருக்கு ஞாயிறு தோறும் மாலை இராகு கால பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு சரபேசுவரரின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்.

குறிப்பு: ஞாயிறு ராகு கால பூஜைதான் சரபேஸ்வரருக்கு செய்வார்கள்.

click me!