Time to Pray : இறைவனை எப்போது வணங்க வேண்டும்.. குறிப்பிட்ட நேரம் என்று ஒன்று உண்டா

By Dinesh TGFirst Published Sep 12, 2022, 7:38 AM IST
Highlights

இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் புராணக்காலத்து கதை.
 

அனைவருக்கும் பொதுவான சந்தேங்கள் இருக்கும். நேர, காலம் என்பதெல்லாம் இறைவனைத் துதிப்பதற்கு உண்டா? இறைவனை குறிப்பிட்ட நேரத்தில் தான் வணங்க வேண்டுமா? இறை நாமம் சொல்வதற்கு முன் என்னென்னவெல்லாம் செய்திட வேண்டும். சதாசர்வ காலமும் இறைவன் திருநாமத்தையே சொல்கிறார்களே.. அவர்கள் செய்வது சரியா? அல்லது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வேண்டுவது சரியா? இத்தனை கேள்விகள் நமக்குள் எழுவது சாதாரணம் தான்.

இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் புராணக்காலத்து கதை.

துக்காராம் என்ற கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார். உடல் உறுப்புகள் ஓய்வின்றி இயங்குவது போல இவருடைய நாக்கும்உணவு மெல்லும் நேரம் தவிர “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று சொல்லிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் எப்போதும் இதையே புராணமாய் பாடுகிறாரே.. என சலித்துக் கொள்பவர்கள்.. இதைத் தவிர உங்களுக்கு வேறு எதுவும் பேச தெரியாதா.. உங்களை அந்தக் கிருஷ்ணா தான் காப்பாற்ற வேண்டும் என சொன்னால் சட்டென்று உரக்க சிரித்துவிடுவார். என்ன காரணம் என புரியாமல் மற்றவர்கள் விழித்தால்... பார்த்தீர்களா.. இப்போதும் கூட கிருஷ்ணா தான் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தீர்கள்.. இதைத்தான் நானும் சொல்கிறேன். கிருஷ்ணா .. கிருஷ்ணா என்று சொல்லுங்கள் என்று மடக்கி விடுவாராம்.

இவர்கள் வீ ட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணி இவரது செயல்களை கவனித்துக் கொண்டே இருந்தாள். மனதளவில் விட்டலாவை ரசித்தப்படி சொல்லி சொல்லி மகிழ்வாள். காரணமே புரியாமல் அவளுடைய மனதையும் விட்டலா வென்று விட்டான் போல.. விட்டலாவை விடாமல் சொல்லியபடி வேலை செய்து வந்தாள்.

ஒருமுறை தனது வீட்டில் அடுப்பு எரிக்க வறட்டி தயாரித்துக்கொண்டிருந்தாள். உடன் அவள் தோழியும் இருந்தாள். வழக்கம் போல விட்டலா விட்டலா என்றபடி வறட்டி தட்டிகொண்டிருந்தாள். கைகள் இயந்திரமாய இயங்க.. இயங்க.. வாய் விட்டலாவின் நாமத்தை ஜெபிக்க வேலையும் சுறுசுறுப்பாக நடந்தது.

இவளது தோழிக்கோ இவளின் வேகம் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. எவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வறட்டி தயாரித்துவிட்டாள். நம்மால் மட்டும் முடியவில்லையே என மனதில் வஞ்சம் மிக அவள் தட்டியிருந்த வறட்டியை எடுத்து இவளது இடத்தில் வைத்துக்கொண்டாள்.

துக்காராம் வீட்டு பணிப்பெண்ணுக்கு விட்டலாவே உடன் இருந்து வேலை செய்தது போல் மகிழ்ச்சி ... நான் முடித்து விட்டேனடி என்றபடி தோழியிடம் திரும்பினாள். தோழியோ புன்னகையுடன் நானும் முடித்து விட்டேனடி என்றாள். அவளது இடம் முழுக்க வறட்டி நிரம்பி வழிந்தோடியது. இவள் தனது வறட்டியைப்பார்த்தாள் வெறும் எண்ணிக்கையில் வறட்டி இருந்தது. என்னடி நான் அதிக வறட்டி தயாரித்தேனே என்றாள்.

தோழியிடம்.. ம்ம்... நீ எப்போது தயாரித்தாய்? விட்டலா...விட்டலா..என்று விட்டத்தை நோக்கி சொல்லிக்கொண்டே இருந்தாய் வறட்டி என்ன வானத்தில் இருந்தா குதிக்கும் என்றாள் தோழி. இல்லை .. நீ தான் என்னுடைய வறட்டியைத் திருடி விட்டாய். அதை ஒப்புக்கொள்ளமால் விட்டலா மேல் பழியிடுகிறாய் என வாதிட்டாள்.

இருவருக்கும் வாதம் அதிகரிக்க, அந்தநேரத்தில் துக்காராம் அங்கே வருகிறார். சரி இருவரும் எதற்கு வாதிட்டு கொண்டு நடுவர் ஒருவரிடம் கேட்போம் என துக்காராமிடம் தங்கள் சந்தேகங்களைக் கூறீனார்கள். தோழி... துக்காராமைப் பார்த்து உங்கள் வீட்டு பணிப்பெண் என்பதால் தாங்கள் அவளுக்கு சாதகமாக தீ ர்ப்பு கூறக்கூடாது என நிபந்தனையுடன் அவரது கருத்துக்களை ஏற்பதாக தெரிவித்தாள்.

சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?

சரி என்ற துக்காராம் வறட்டி எடுத்து திருப்பி திருப்பி பார்த்தார். முகத்தின் அருகில் கொண்டு போனபோது விட்டலா என்ற சத்தம் வறட்டியிலிருந்து கேட்க, பிறகு ஒவ்வொரு வறட்டியாய் காதில் வைத்து கேட்டார். விட்டலா என்ற சத்தம் கேட்ட வறட்டியை ஒரு புறமும், சத்தமில்லாத வறட்டியை மறுபுறமும் வைத்தார். வறட்டி தட்டும் போது விட்டலா என்று கூறியது யார் என்று கேட்டார். பணிப்பெண் நான் தான் என்றாள்.

இதோ இதுதான்உன்னுடைய வறட்டி. நீ விட்டலா.. விட்டலா என்று சொல்லும் போது நீ கூறிய திசையில் உள்ள காற்றிலெல்லாம் விட்டலா என்னும் வார்த்தை பரவியது. அப்படி இந்த வறட்டிக்குள்ளும் அத்திருநாமம் பரவி இப்போது எதிரொலிக்கிறது. சரியா என்றார்.. தோழி ஆமாம் என்பதுபோல் தலையயாட்டினாள். இனி இதுபோல் செய்யமாட்டேன் என மன்னிப்பும் கேட்டாள்.

குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு

இது புராணக்கதை ஆனால் விட்டலா என்றாலும்.. பாண்டுரங்கா.. பண்டரிநாதா என்றாலும்... கிருஷ்ணா என்றாலும்.. சிவ சிவா என்றாலும் ராமா..ராமா.. என்றாலும் இறைவன் உடன் இருப்பார். இறைவன் நாமம் சொல்ல நாக்கு தயங்குமா என்ன? அதனா ல்
என்ன வே லை செ ய்தாலும் இறைவன் நாமம் சொ ல்லி தொடங்குங்கள். இறைவன் உடன் இருப்பான்.

click me!