Avani Pournami 2022 : ஆவணி பௌர்ணமியில் அப்படி என்ன விசேஷம்

By Dinesh TG  |  First Published Sep 10, 2022, 2:13 PM IST

பெளர்ணமி நாளில் நல்ல எண்ணங்களுடன், நல்ல சிந்தனைகளுடன் இருந்தால் நம்முடைய பாஸிட்டிவ் எனர்ஜி அதிகமாகும். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவற்றை பார்ப்போம்.


பௌர்ணமி தினத்தில் நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாய் இருக்கும். நிலவு, பூமியின் மேல்மட்ட பகுதிகள் நிலவிற்கு திறந்தநிலையில் இருப்பதால், நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் மேல் பகுதிகளின் மேல் தீவிர தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இயற்கையிலேயே இது போன்ற ‘இழுக்கும்’ சக்தி வேலை செய்யும்போது, உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், உங்களுக்குள் இருக்கும் சக்தி, இயல்பாகவே மேல்நோக்கி பயணம் செய்யும்.
உங்கள் ரத்தஓட்டமும் சரி, பிராண சக்தியும் சரி, வெளிஅதிர்வுகள் மாறியிருப்பதால், எப்போதும் போலன்றி வேறுவகையில் ஓடத் துவங்கும்.


எப்படி நீர்மட்டத்தில் வழக்கத்தை விட பௌர்ணமி அன்று நிலவின் தாக்கம் அதிகமாய் இருக்கிறதோ, அதனால் கடலின் அலைகள் அதிகமாக மேலெழும்புகிறதோ, அதே போல் உங்கள் ரத்தமும் மேல் இழுக்கப்பட்டு, மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இந்த மேலெழும்புதல் நடைபெறும்போது, உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது மேம்படும். பெளர்ணமி நாளில் நல்ல எண்ணங்களுடன், நல்ல சிந்தனைகளுடன் இருந்தால் நம்முடைய பாஸிட்டிவ் எனர்ஜி அதிகமாகும். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவற்றை பார்ப்போம்.

சித்ரா பௌர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
வைகாசி பௌர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
ஆனிப் பௌர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
ஆடிப் பௌர்ணமி - திருமால் வழிபாடு.
ஆவணிப் பௌர்ணமி - ஓணம், ரக்ஷா பந்தனம்.
புரட்டாசி பௌர்ணமி - உமாமகேசுவர பூஜை.
ஐப்பசி பௌர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்.
கார்த்திகைப் பௌர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.
மார்கழிப் பௌர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.
தைப் பௌர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.
மாசிப் பௌர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.

Tap to resize

Latest Videos

பங்குனிப் பௌர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்.

பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கு பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த ஆவணிப் பௌர்ணமியில் விரதம் இருப்பது கடன்தொல்லை நீங்க வழி வகுக்கும். அம்பிகையைப் போற்றி வணங்கி நெய் கலந்து சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு
செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்னைகள் மெல்ல மெல்ல விலகும்.
 

click me!