சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் முடிவடைய உள்ள நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக 10-12 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், கோவிலுக்கு செல்லும் வழியில் மிகப்பெரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சபரிமலையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு ஆந்திரா, தமிழ்நாடு, திருச்சூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு செல்லாமலேயே வீடு திரும்பியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் வாகனங்களை தடுத்ததால் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
undefined
பம்பைக்கு செல்ல அனுமதி வழங்காத அதிகாரிகளின் முடிவைக் கண்டித்து எருமேலியில் பக்தகர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் எருமேலி - ரன்னி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏட்டுமானூர் மகாதேவர் கோயிலில், பல மணி நேரம் காத்திருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுத்ததையடுத்து, அதிகாலையில், பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நேற்று காலை ஏட்டுமானூர் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், எருமேலி மற்றும் பம்பையில் கூட்ட நெரிசலை காரணம் காட்டி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திருச்சூரில் உள்ள அரிம்பூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற 60 வயதான ஓமனா இதுகுறித்து பேசிய போது “ என் தந்தையுடன் குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு வந்தேன். இன்னும் அந்த அழகிய பாதை எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. நான் வயதான பெண்ணான பிறகு குடும்பத்துடன் சபரிமலைக்கு செல்வது இதுவே முதல் முறை. பம்பையிலிருந்து சன்னிதானம் மற்றும் சபரிமலைக்கு செல்லும் மலையேற்றப் பாதையின் தற்போதைய நிலையைப் பார்க்க ஆவலுடன் வந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இன்று (செவ்வாய்கிழமை) நிலக்கல்லில் எங்கள் பயணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.நிலக்கல் சூழ்நிலை எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இப்போது நாங்கள் பந்தளத்திலிருந்து திரும்பி வருகிறோம். " என்று தெரிவித்தார்
போலீசார் வாகனங்களை தடுத்ததால், எருமேலியில் இருந்து நிலக்கல்லுக்கு பக்தர்கள் வர எட்டு மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து பேருந்துளுமே போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், பம்பைக்கு செல்ல முடியவில்லை.
மற்றொரு பக்தர் அசோக் குமார் பேசிய போது "குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பயந்தோம். எனவே நாங்கள் நிலக்கல்லில் யாத்திரையை முடித்துவிட்டு காலை 6 மணிக்குத் திரும்பினோம். பந்தளம் கோயிலை அடைந்து சடங்குகளைச் செய்தோம்," என்று தெரிவித்தார்.
சபரிமலை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
சபரிமலை பக்தர்கள் சன்னதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஆதரவை உறுதி செய்யவும், வாகனங்கள் நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி செய்யவும் அதிகாரிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நீதிபதிகள் அனில் நரேந்திரன் மற்றும் ஜி கிரீஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில காவல்துறையை கேட்டுக் கொண்டது.
கல்வி நிறுவனங்களில் உள்ள என்எஸ்எஸ் தன்னார்வலர்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்களை வழங்கலாமா என்பதை திருவிதாங்கூர் தேவசம் போர்டு பரிசீலிக்கும்" என்று நீதிமன்றம் கூறியது.
அதிகபட்சமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு பார்க்கிங் மைதானத்திலும் போதிய எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்கள்/ பணியாளர்களை தேவசம் போர்டு நிறுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. குழந்தைகள் உட்பட அனைத்து பக்தர்களுக்கும் கோயிலில் கூடுதல் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குபேர யந்திரத்தை இந்த திசையில் வைத்து வழிபட்டால் போதும்.. பணம் சேர்ந்துகொண்டே இருக்குமாம்..
சபரிமலை கோயிலில் கூட்ட நெரிசலுக்கான காரணங்கள்
டிசம்பர் 8-ம் தேதி காலை தொடங்கிய போக்குவரத்து நெரிசலால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் பாதிப்பு ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், தினமும் சராசரியாக 50,000 பக்தர்கள் வருகை தந்தனர். டிசம்பர் 7ஆம் தேதிக்குப் பிறகு பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரிக்க தொடங்கியது.
சென்னை வெள்ளம்: சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது கேரளா செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பயணமும் தடைபட்டது. பின்னர் இந்த பக்தர்கள் முன்பதிவு செய்து சன்னிதானம் வந்தனர்.
தெலுங்கானா தேர்தல்: அண்டை மாநிலமான தெலங்கானாவில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததாக கூறப்படுகிறது. பிற மாநிலங்களில் பணிபுரிபவர்கள், வாக்களிக்க சொந்த ஊருக்குச் சென்று, அங்கிருந்து சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிடலில் குறைபாடு: அறிக்கையின்படி, சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல்லில் உள்ள காவல்துறையினர் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. சன்னிதானம் செல்லும் பக்தர்களை கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு தரிசனம் முடிந்து சென்றவர்களை அழைத்து வருவதும் முக்கியம்.
ஒரு நாளைக்கு எத்தனை பேர் தரிசனம் செய்ய வருவார்கள் என்பது காவல்துறைக்கும், தேவசம்போர்டுக்கும் தெரிந்திருந்தும், ஏற்பாடு செய்வதில் தோல்வி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்பதிவு செய்தவர்களைத் தவிர, தாமதமாக வந்தவர்களும் சேர்ந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.