தற்போது ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு அசுப மற்றும் மங்களகரமான சில காரியங்கள் நடக்கும். அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பிறருக்கு பண உதவி செய்து உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ரிஷபம் ராசி:
தற்போது ராகு ரிஷப ராசியின் 11ஆம் வீட்டிற்கு வந்திருக்கிறார். கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களால் ரிஷப ராசிக்கு இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்திலும் தடைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, வேலை இல்லாமல் திண்டாடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும், தொழில் செய்ய விரும்புவோருக்கு அதற்கான கடன் கிடைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் ரிஷப ராசிக்கு ராகு மற்றும் கேது தரும் யோகம் குறித்து இங்கு பார்க்கலாம்.
ராகு தரும் யோகம்:
உயர் பதவிகள் கிடைக்கும்: அரசியல்வாதியாய் இருப்போருக்கு உயர் பதவிகள் உங்களை தேடி வரப்போகுது. வீட்டில் உறவினர்கள் வருகையால் நன்மைகள் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் லாபம் கிடைக்கும்.
இவற்றில் கவனமாக இருங்கள்: நீங்கள் பிறருக்கு கடன் கொடுத்து ஏமாந்து போகலாம். எனவே, கடன் கொடுக்காதீர். வேலைக்காக யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பிறருக்காக ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற முடியாமல் போகலாம். எனவே, யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்.
இதையும் படிங்க: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
வெற்றி கிடைக்கும்: உங்களின் புதிய முயற்சிக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் செய்யும் தொழிலில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மேலும் வருமானமும் அதிகரிக்கும். வட்டித் தொழில், ஷேர் மார்க்கெட் போன்ற முதலீடுகளில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
இதையும் படிங்க: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
குடும்பத்தில் சந்தோஷம்: கணவன் மனைவி உறவில் சின்ன பிரச்சினைகள் வரலாம். எனவே, கவனம் தேவை. மேலும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏற்ற சமயத்தில், நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருக்கும் தடைகள் நீங்கும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பொருளாதார நிலை மேம்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திடீர் பண ஆதாயம் கிடைக்கும்: ராகுவால் திடீர் பண வரவு கிடைக்கும். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் சிக்கிய பிரச்சனை தற்போது தானாகவே மறையும். சொத்து பிரச்சினை உங்களுக்கு சாதகமாக முடியும்.
வெளிநாட்டு பயணம் கிடைகும்: இந்நாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி சீக்கிரம் முடியும். திருமணமாகமல் இருப்போருக்கு விரைவில் திருமணம் நடக்கும். வெளிநாட்டில் வேலை அல்லது படிப்பிற்காக முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கேது தரும் யோகம்:
சம்பள உயர்வு கூடும்: கேது 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது உங்களை தேடி வந்து பேசுவார்கள். உயர்பதவி உங்களை தேடி வரும். சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறும் காலம் இது.
வெற்றிகள் உங்களை தேடி வரும்: நீங்கள் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே பிரச்சினைகள் நீங்கும். இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கேது சில சிக்கல்களை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் சில சங்கடங்கள் வரும். திடீர் மருத்துவ செலவு வரும்.
செலவுகள் அதிகரிக்கும்: வரவுக்கு மிஞ்சி செலவுகள் அதிகரிக்கும். ஆனாலும் கேதுவால் உதவி உங்களை தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய நட்புகளிடம் கவனம் தேவை. பிரிந்தவர்கள் ஒன்று சேரலாம்.
பிள்ளைகள் நலனில் கவனம் தேவை: பிள்ளைகள் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுவது அவசியம். பிள்ளைகளின் உயர்கல்வியின் கடன் சுமை குறைய வாய்ப்பு உண்டு. உங்களின் புதிய முயற்சிகள் விரைவில் கை கூடும். மேலும் ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.