நம் வீட்டு பூஜை அறையில் என்னென்ன சாமி படங்கள் இருக்க வேண்டும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்துக்களின் வீடுகளில் எது இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக பூஜை அறை இருக்கும் ஒரு வேலை பூஜை அறை வைக்க இடவசதி இல்லை என்றால் கூட ஒரு சின்ன செல்ஃப் பூஜை அறையாக மாறி இருக்கும். பலர் எந்த கோயிலுக்கு சென்றாலும் சில சுவாமி படங்கள், விக்ரகங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை வாங்கி அவர்களது பூஜை அறையில் வைக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்தால் அவர்களது வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். எனவே பூஜை அறையில் என்னென்ன படங்கள் வைக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்கள்:
விநாயகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ மகாலட்சுமிரின் கூடிய பகவான் நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், மேலும் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பால திரிபுரசுந்தரி மற்றும் லலிதாம்மாள், அஷ்டலட்சுமி ஆகிய படங்களும், குரு சாய்ராமன், ராகவேந்திரர், யோகிராம் சூரத்குமார் அல்லது வணங்குகிற ஒரு குரு ஆகியவை பூஜை அறையில் இருக்க வேண்டும்.
அதுபோல கல்வி ஞானத்துக்கு அதிபதியான சரஸ்வதி பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் குலம் காக்கும் குல தெய்வம் படம் அது உக்கிரமாக இருந்தாலும் நிச்சயமாக இருக்க வேண்டும். வீட்டிலேயே நவக்கிரகங்களை சிறிய அளவில் பாடமாக வைத்து வணங்கலாம். நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களை போக்க சனிக்கிழமைகளில் விளக்கேற்றி பூஜை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இதையும் படிங்க: Vastu tips: வீட்டில் இந்த திசையில் ஏர் கூலரை வச்சு பாருங்க!! வீடு செல்வங்களால் நிரம்பி வழியும்.. !!
பூஜை அறையில் இருக்கக் கூடாது:
எக்கச்சக்கமாக தெய்வப் படங்களையோ, தெய்வத் திருவுருவங்களையோ வைத்து நிரப்புவதைவிடக் கண்ணுக்கு நிறைவாக இருக்கும் குறைந்த எண்ணிக்கையோடு இவற்றை நிறுத்திக் கொள்வது நல்லது. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.