பித்ரு தோஷம் இருப்பதை எப்படி கண்டறிவது ? பரிகாரம் என்ன?

By Dinesh TG  |  First Published Oct 26, 2022, 3:06 PM IST

வீடுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு சரியான திதி கொடுப்பது மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாமல் இருந்தாலும், கருச்சிதைவு செய்வதனால் பித்ரு தோஷம் வரும் என்று கூறப்படுகிறது. 


பித்ரு தோஷம் தான் இருப்பதிலே மிகக் கொடிய தோஷம் என்று கூறப்படுகிறது. இது எப்படி ஏற்படுகின்றது என்றால்.. ஒருவரின் இறுதி காலங்களில் அவர்களது பிள்ளைகள் சரிவர கவனித்து கொள்ளாமல் இருப்பதினால், வீடுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு சரியான திதி கொடுப்பது மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாமல் இருந்தாலும், கருச்சிதைவு செய்வதனால் பித்ரு தோஷம் வரும் என்று கூறப்படுகிறது. 

பித்ரு தோஷத்தின் வலிமை குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் இந்த தோஷம் கடவுள் நமக்கு கொடுக்கும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தது. அதனால் இதில் கவனமாக இருந்திட வேண்டும்.

Tap to resize

Latest Videos

பித்ரு தோஷம் நமது ஜாதகத்தில் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், நம்முடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவுடன் சூரியன் அல்லது சந்திரன் எந்த இடத்திலாவது சேர்ந்து இருந்தால் பித்ரு தோஷம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அதேபோன்று ஒருவர் பிறந்த ஜாதகத்தில் ராகு அல்லது கேது லக்னத்துக்கு 1,5,7,9 ஆகிய  இடங்களில் இருந்தாலும் பித்ரு தோஷத்துடன் அவர்கள் பிறந்துள்ளதாக அர்த்தம். இந்த தோஷம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும். நமது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் திருமணம் தடைபடும்.  திருமணம் முடிந்திருப்பின் கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் இல்லாமல் சண்டை சச்சரவுகளுடன் அவர்கள் வாழ்க்கை விவாகரத்து வரை செல்லலாம். இன்னும் சிலருக்கு குழந்தைப் பாக்கியம் இருக்காது என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கும். இப்படி  பித்ரு தோஷம் தாக்கியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான  பிரச்சனைகள் உண்டாகும். 

சாஸ்திரப்படி, பித்ரு பூஜையை முறையாக செய்பவர்களின் தோஷங்கள் அகன்று விடும் என்கிறார்கள் பெரியோர்கள்.தற்போது நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதத்தை அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று குடும்பத்தார்கள் பிண்டம் செய்வதும், அதை படைப்பதும் வழக்கம். இதனால் நம்மை சுற்றி இருந்து கொண்டிருக்கும் நமது முன்னோர்களில் ஆன்மா மனம் மகிழ்ந்து, சாந்தி அடையும். இதுபோன்று அனைவராலும் அனைத்து நேரங்களிலும் செய்ய முடியுமா என்றால் ஒரு சிலரால் இது இயலாது. அதனால் ஏதாவது ஒரு அமாவாசை தினத்தன்று ஆற்றங்கரையிலோ அல்லது தன் வீட்டில்,வருடத்திற்கு ஒரு அமாவாசை என்று நமது ஆயுள் முழுவதும் செய்து வருவது நமக்கும் சரி, நம்முடைய சந்ததியினருக்கும் சரி அளவில்லாத புண்ணியங்களையும் தரும் என்பது ஐதீகம்.

மகாலஷ்மியின் அருள் பூரணமாக கிடைக்க தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை வ்ழிபாட்டு முறைகள்!

இந்த பித்ரு தோஷத்திற்கு வெறும் பூஜைகளை மட்டுமின்றி அதற்கான பரிகாரமும் செய்து வந்தால் பலன்களை அடைய முடியும். அந்தவகையில் இந்த தோஷத்துக்கான பரிகாரங்களாக ராமேசுவரம் சென்று தில ஹோமம் செய்து வரலாம். கயா சிரார்த்தம் செய்யலாம். காசி, அலகாபாத் மற்றும் பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் சொல்லப்படுகிறது. மேலும் இதில் தில ஹோமத்தை விபத்தின் காரணமாக நமது குடும்பங்களில் யாரேனும் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். ஏனென்றால் தில ஹோமத்தை  இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டியதில்லை. 

கந்த சஷ்டி விரதம் 2022: விரதத்தின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்? எப்படி விரதத்தை தொடங்குவது?

அந்ததந்த பூஜைகளையும், பரிகாரங்களையும் சரிவர செய்து வந்தால் பித்ரு தோஷத்தால் எந்த பாதிப்பும் வராது. அதேபோன்று நாம் செய்யும் செயல்களை சரிவர செய்து வந்தாலே பித்ரு தோஷம் நமக்கு ஏற்படாமலே நம்மால் காக்க முடியும். இதுவரை தவறியிருந்தாலும் இனி வரும் காலங்களில் சரிவர அனைத்தையும் செய்து தக்க பலன்களை அடையலாம்.

click me!