நவக்கிரக வழிபாட்டிற்கு நடுவில் நமசிவாயத்தை மறக்காதீர்கள்!

By Dinesh TG  |  First Published Oct 26, 2022, 5:43 AM IST

ஜோதிடத்தில் மிக அடிப்படையாக 12 ராசிகள் பார்க்கப்படுகிறது. அந்த ராசிக்கான அமைப்பாக தான் ஜாதக ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு குணங்களுடன் உள்ளன.


  இப்படி ஒவ்வொருவரின் ஜாதகத்தில், அவரவர் பிறந்த நேரங்களின் அமைப்பை பொருத்து ஜாதக கட்டத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும். 

இப்போது உங்களுடைய ஜாதகத்தில் சனி திசை நடக்கிறது என்றால், சனி பகவான் உங்களுக்கு இன்னல்களை தராமல் போக மாட்டார். அதேபோன்று கேது திசை நடந்தால், வீடுகளில் கெட்ட காரியம் நடக்கும். சுக்கிர திசை நடந்தாலும், இடையில் ராகு குறுக்கிட்டால் நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். இப்படி  நமது ஜாதகங்களை அலசி ஆராய்ந்து அதற்கான பலன்களை சொல்பவர்கள், அதற்கான பரிகாரங்களையும் சொல்ல தவறியதில்லை. 

Latest Videos

அப்படி உங்கள் ஜாதகத்தில் இதுபோன்று திசை நடப்பதாய் இருந்தால் அதற்குரிய திருத்தலத்திற்கு சென்று அங்கிருக்க கூடிய நவக்கிரகங்களில் உரிய பகவானை வணங்கி வழிபட்டு அபிஷேகம் செய்திட வேண்டும். அப்படி செய்வதனால் நமது குறைகள் நிவர்த்தியாகும். இதன் காரணமாய் தான் பல நபர்கள் நமது ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லை என நவக்கிரகங்களை நாடி சுற்றி வருகிறோம். இதைத்தான் திருஞானசம்பந்தர், 

'ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளு நாளுவை போயறுங் குற்றமில்லார்களே'

குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?

என்று கூறியிருக்கிறார். அதாவது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காத்தருளும் பொறுப்பை கொண்டவர் சர்வேஸ்வரன். நாம் வணங்கக்கூடிய கோள்கள் அந்த சர்வேஸ்வரனை தான் வணங்கி பெருமை அடைந்து வருகின்றனர். அப்படியிருக்க நாம் அனவைரும் அந்த சர்வேஸ்வரனை மறந்துவிட்டு, வெறும் நவக்கிரகங்களை மட்டும் வணங்கி வழிபட்டு வருவது சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அகிலத்தை ஆளும் சிவபெருமானின் கட்டளை ஏற்று தான் நவக்கிரகங்கள் செயல்பட்டு வருகிறது. 

கந்த சஷ்டி விரதம் 2022: விரதத்தின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்? எப்படி விரதத்தை தொடங்குவது?

இதுகுறித்து புராண நூல்களிலும் சூரியன், செவ்வாய், சந்திரன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது நவக்கிரகங்களும் சிவபெருமானை துதித்து வழிபட்டதாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஆதியும் அந்தமும், பிறப்பும் இறப்பும், முதலும் முடிவும் என எதுவும் இல்லாத ஒருவர் அகிலத்தை ஆளும் நாயகன் மட்டும் தான். இதனால் தான் சிவபெருமான் முழு முதற் பரம்பொருள் என்று அழைப்படுகிறார். 

'நாள் என் செய்யும், கோள் என் செய்யும் 
நமசிவாயத்தை நம்பியோர்க்கு' என்றும் சொல்லப்பட்டுள்ளது. நவசிவாயத்தை பற்றியும் நினைவில் கொள்ளுங்கள். நவக்கிரகங்கள் நமக்கு நம்மையே அளிக்கும். நவக்கிரக வழிபாடுகளும் நமக்கு நன்மையே அளிக்கும். ஆனால் அதேநேரத்தில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே.. என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் எந்த வழிபாடும் மேற்கொள்வது சரியே.. ஆனால் நவசிவாயத்தை வழிபட்டு விட்டு, வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

click me!