சூரிய கிரகணம் ஏன்.. ஆன்மிக வரலாறும்.. அறிவியலும் சொல்வது என்ன?

By Dinesh TGFirst Published Oct 25, 2022, 3:49 PM IST
Highlights

பல மூட நம்பிக்கைகளுக்கு மத்தியில் தான், வானியல் ஆய்வாளர்கள் வானியல் அதிசயத்தையும் அதன் தோற்றம் மற்றும் அதற்கான காரணங்களையும் கண்டு பிடித்து விளக்கம் கொடுத்துள்ளனர். 

நிலவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும் போது, சூரியனை நிலவு மறைத்து விடுவதை தான் கிரகணம் என்று சொல்கிறோம். தற்போது சூரியனை நிலவு மறைப்பது போல பூமியில் இருந்து பார்க்கும் போது தோன்றும். அதோடு இந்த சூரிய கிரகணம் அமாவாசை நாளில் தான் நிகழும். ஆனால் இந்த சூரிய கிரகணம் வந்தாலே அந்த காலத்தில் நமது மூதாதையர்கள் பயத்துடன் பதட்டமும் அடைந்து விடுவார்கள். 

அதற்கு முக்கிய காரணம் சூரிய கிரகணம் அழிவின் அறிகுறியாக பார்த்தது தான். குறிப்பாக கிரகண நேரத்தில் நமக்கு துன்பம் வந்துவிடும் என்றும், இதெல்லாம் நமது தெய்வத்தின் கோபம் தான் காரணம் என்று பல மூட நம்பிக்கைகள் இன்றும் சில கிராமங்களில்  வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி பல மூட நம்பிக்கைகளுக்கு மத்தியில் தான், வானியல் ஆய்வாளர்கள் வானியல் அதிசயத்தையும் அதன் தோற்றம் மற்றும் அதற்கான காரணங்களையும் கண்டு பிடித்து விளக்கம் கொடுத்துள்ளனர். 

இந்த கிரகணத்திற்கு இந்து மதரீதியில் வேறு சில காரணங்கள் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கேது சூரியனை  கக்குவதாகவும், இந்த தருணத்தில்  விஷமானது கேதுவில் இருந்து வெளியாகிறது என்று கூறப்படுகிறது. இதுதான் பல  தீமைகளை நமக்கு  தருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது பாம்பு பார்த்தல் நம்மை கொத்தாமல் விடாது என்றும், இதனால் நம் வாழ்வில் பெரும் இழப்புகள், கடும்  பாதிப்புகளுக்கு கூட ஆளாக்கக்கூடும் என்று அச்சுறுத்தல்கள் அப்போது இருந்தது.

இதற்கு புராதன கதையும் உள்ளது. மகாபாரத்தில் சக்கரவியூகத்தை உடைக்கும் திறமை ஒரேயொருவனுக்கு மட்டும் தான்இருந்தது . அது அர்ஜுனன் தான். அப்போது துரியோதனன் அர்ஜுனனை சக்கரவியூக்கத்திற்குள் கொண்டு செல்ல, அதிலிருந்து வெளிவர அர்ஜுனன் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என நினைத்த அபிமன்யூ சக்கரவியூகத்தை உடைத்து யுத்தம் செய்து, இறந்தும் விடுகிறான். இறுதியாய் யுத்தம் முடிந்து சக்கரவியூகத்தில் இருந்து வெளிவந்த அர்ஜுனன், அபிமன்யூவை துரியோதரர்களான ஜெயத்ரதன் கொன்றதாக கேட்டு,  நாளை மாலை சூரியன் மறைவதற்குள் அவனை கொன்று விடுவேன் இல்லை என்றால் நான் தீயில் விழுந்து உயிர் தியாகம் செய்வேன் என சபதம் எடுக்கிறார்.

Surya Grahan 2022 Today : இன்று சூரிய கிரகணம்.. கிரகணத்தின் போது என்ன செய்யலாம்? என்ன செய்ய கூடாது?

இதனால் அர்சுனனின் கண்ணில் ஜெயத்ரதனை படாமல் துரியோதரர்கள் பாதுகாத்தனர். என்ன செய்வதென்று யோசித்த அர்ஜுனனுக்கு உதவ, கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தை ஆகாயத்தில் செலுத்தி சூரியனை மறைத்தார். அப்போது அர்சுனன் ஜெயத்ரதனை கொல்லாத காரணத்தினால், அக்னி குண்டத்தில் விழ அர்சுனன் தயாரானார். இதனைக் ஆவலுடன் காண துரியோதரர்களும், சூரியன் மறைந்துவிட்டது நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது என ஜெயத்ரதனும் வந்துவிட்டார். 

அந்த நேரத்தில் கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தை திருப்பி பெற்றதால், சூரியன் வந்துவிட்டது. உடனே கிருஷ்ணன் அங்கு தோன்றி அர்சுனனிடம் அம்பை எடுத்து கொடுத்து ஜெயத்திரதனை கொல்ல செய்தார். சூரியன் சிறிது நேரம் கிருஷ்ணரால் மறைக்கப்பட்ட இந்த நிகழ்வே 'சூரிய கிரகணம்' என பண்டைய காலத்தில் கூறினர் . 

குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?

இதேபோன்று ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் நாள் சூரிய கிரகணத்தின் போது தான்.  இதனால் தான் சூரிய கிரகணம் அழிவுக்கான ஆரம்பம் என்று மூதாதையர்கள் நினைக்க ஆரம்பித்தனர்.  
காலங்கள் வளர வளர அறிவியல் விஞ்ஞானம் பெருக பெருக தான் சூரிய கிரகணம் என்பது வானியல் மாற்றங்கள் என்றும், சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றிக்கு இடையே நடக்கும் விஞ்ஞான நிகழ்வு என்பதும்  அனைவருக்கும் தெரிய வந்தது.

click me!