இறைவனை வழிபட பல நாமங்கள் இருப்பினும், அதை அனைத்தையும் விட உயர்ந்த நாமம் ஸ்ரீ ராம நாமம் தான். இதுகுறித்து ராமனுக்கே தெரியாத போது அதனை புரிய வைத்தவர் ராமனின் பக்தரான அனுமன் தான்.
பொதுவாக நாம் அனைவரும் இறைவனை வழிபடுவதெற்கென்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். குறிப்பாக இறைவனை ஒரு சில இடங்களுக்கு சென்று தான் வழிபட வேண்டும், அதாவது இறைவனை வணங்க வேண்டிய இடங்களாக கோயில்களும், பூஜையறைகளும் தான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை இங்கு தான் வணங்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. உங்களது மனம் ஒத்துழைத்தால் சதா 24 மணி நேரமும் இறைவனின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள்.
இன்னும் சொல்லப்போனால் இறைவனை விட அவனின் திருநாமத்திற்கு சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது. இவ்வுலகத்தில் இறைவனை வழிபட பல நாமங்கள் இருப்பினும், அதை அனைத்தையும் விட உயர்ந்த நாமம் ஸ்ரீ ராம நாமம் தான். இதுகுறித்து ராமனுக்கே தெரியாத போது அதனை புரிய வைத்தவர் ராமனின் பக்தரான அனுமன் தான்.
ஒருமுறை சீதா தேவியை ராவணனிடமிருந்து மீட்டு வருவதற்காக ஸ்ரீ ராமன் முடிவு செய்தார். அப்போது இலங்கை செல்வதற்காக வானரங்கள் அனைத்தும் பாலம் அமைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தன. இந்த பணியை வானரங்கள் எந்தவொரு தொய்வும் இல்லாமல் சோர்வின்றி செய்து வந்தன.
இவையனைத்தையும் அனுமன் முன் நின்று கவனித்து வந்தான். அதுமட்டுமின்றி மற்ற வானரகங்களுக்கும் வழிகாட்டிக் கொண்டிருந்தான். அப்போது, "தோழர்களே, கடலில் விழும் கற்கள் அனைத்தும் ஒன்றின் மேல் ஒன்று விழுந்தால் பாதை அமையாது. கற்கள் எப்போதும் ஒன்றோடொன்று ஒட்டி தான் இருக்க வேண்டும் என்றும், கவனம் எப்போதும் ஒன்றின் மீது ஒன்று நிற்கக்கூடாது" என்று சொல்லிக்கொண்டே ஒரு கல்லை தூக்கி கடலில் போட்டார்.
மறுபடியும் இன்னொரு கல்லை எடுத்து, "இப்போது கவனமாக பாருங்கள்" என்று தூக்கி போட்டார். அப்போது முதலில் போட்ட கல்லுக்கு அருகிலே நெருக்கமாக ஒட்டி அமர்ந்தது இரண்டாவது கல். அப்போது அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. எல்லாம் சரி.. ஆனால் ஒரு நீண்ட பாதைக்கு எப்படி இதேபோன்று ஒரேமாதிரியாக கற்களை சரியாக இட முடியும் என்று கேள்வி எழுப்பினர். அனுமனும், அதான்.. ஸ்ரீ ராம நாமம் உள்ளதே என்று பதிலளித்து, வானரங்களின் முகத்தை பார்த்தார். அப்போது வானரங்களுக்கு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. ஏன் இந்த யோசனை ராம நாமம் பலனளிக்காது என்று சிந்திக்கிறீர்களா என்று கேட்டார்.
செல்வம் பெருக காரணமாய் இருக்கும் காயத்திரி மந்திரம் .. தினமும் சொல்லுங்க!
உடனே வானரகங்கள் இல்லை இல்லை நாங்கள் எப்படி ராம நாமத்தை மறந்தோம் என்பதே எங்களின் வேதனை. அனுமன் நகைத்து விட்டு சரி அனைவரும் பணிகளைத் தொடங்குங்கள் என்றார். அனுமன் சொன்னபடி வானரங்கள் கல்லை தூக்கி போட கற்களும் சரியாக விழுந்தது. அந்த நேரத்தில் ராமர் சரியாக வர, இவ்வளவு அழகாய் வானரங்கள் கற்களை தூக்கி போடுவதை பார்த்து வியந்தார். உடனே நானும் போடுகிறேன் என்று அனுமனிடம் சென்று குழந்தை போல் சொல்லி, ஒரு கல்லையும் தொக்கி போட்டார். ஆனால் அந்தக்கல் நீரில் நிற்காமல் அடித்து சென்றது. ராமரின் முகமும் வாடிவிட்டது அதனை அனுமன் உட்பட அனைவரும் பார்த்து புன்னகைத்து நின்றனர்.
கோடி நன்மை தரும் குரு பார்வை விழ என்ன செய்வது
ஒருகட்டத்தில் ராமரின் முகவாட்டம் தாங்காமல் அனுமன் வந்து, சுவாமி என்ன ஆயிற்று.. ஏன் இவ்வளவு கவலை என கேட்க, ராமரும் நீங்கள் இடும் கல் மட்டும் அழகான பாதையாய் அமைகிறது. என்னால் ஏன் அதுபோன்று பாதையை அமைக்க முடியவில்லை என்று கேட்டார். அனுமனும் சுவாமி நாங்கள் அனைவரும் ராம் ராம் என்று உங்களது திருநாமத்தை சொல்லிக்கொண்டே கற்களை போட்டதால் சரியான பாதை அமைந்தது. நீங்கள் ராமராகவே இருந்தாலும் ராம் ராம் சொல்ல வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் பாதையும் அமைத்திருக்கும் என்று கூறினார் அனுமன். இதுபோன்று ராம நாமத்தை உச்சரித்து வந்தால் உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளிலும் ராமனை காணலாம்.