
நம் வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருப்பது சாதாரணம் தான் ஆனால் முருகன் அன்றே கணித்தார் என்றே கூறலாம். பாதாள செம்பு கோயில் கீழே இறங்கி மேலே ஏறுவது கோயிலின் சிறப்பு என்று கூறப்படுகிறது தரைத்தளத்தில் ஒருவரும் மற்றும் பாதாளத்துக்குள் ஒருவரும் அவரை பார்த்துவிட்டு மேலேறுவதே இத்தகைய கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இதில் வரலாற்று பின்னணியை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கோவிலின் அமைப்பு:
பாதாள கருவறையில், முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த சிலைக்கு முன்பு, திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது. கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டதாகும். இதேபோல் முன்மண்டபத்தில் செல்வவிநாயகர், அர்த்த மண்டபத்தில் பரிவார தெய்வமாக காலபைரவர் வீற்றிருக்கின்றனர். கோபுரத்துக்குள்ளேயே 36 அடி உயரத்தில் சிவன் சிலை அமைந்திருக்கும் .
பலன்கள்:
இக்கோயிலில் கொடுக்கப்படும் கருங்காலிமாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். எதிர்மறை சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.