Palani Murugan Temple: பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் .. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்..!

By vinoth kumarFirst Published Mar 24, 2024, 10:46 AM IST
Highlights

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சியாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவல பாதையில் குவிந்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சியாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.  பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: கிருஷ்ண பக்தர்களுக்கு குட் நியூஸ்! 25 மார்ச் அன்று கௌர பூர்ணிமா விழா... கிருஷ்ணர் அருளைப் பெற்று மகிழுங்கள்!

பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்திற்க்கு  வருகை தந்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் பால் காவடி, பன்னீர் காவடி புஷ்ப காவடி, இளநீர் காவடி என எடுத்து வந்து ஆட்டம்  ஆடி பக்தி பரவசத்தை கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படிங்க:  ஏப்ரல் 14 குரோதி தமிழ்ப் புத்தாண்டு.. ராகுவால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

பக்தர்கள் மலை மீது தரிசனம் செய்ய குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து கீழே இறங்க படிப்பாதை வழியாகவும் என ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவைக் காண பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

click me!