கணவன் மனைவிக்குள் உள்ள சிக்கல் தீர வேண்டுமா?

Published : Sep 09, 2022, 01:17 PM IST
கணவன் மனைவிக்குள் உள்ள சிக்கல் தீர வேண்டுமா?

சுருக்கம்

பொதுவாக கணவன் மனைவி உரையாடலில் மறைமுகமான எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும். குறிப்பாக, ”கடவுள் கி ட்ட என்ன வேண்டினாய்?" என கணவன் மனைவியிடம் கேட்க.. “இனிவரும் ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராக வரவேண்டுமென்று வேண்டினேன்" என மனைவி தெரிவித்து, "சரி நீங்க என்னதான் வேண்டுனீங்க?" என மனைவி கேட்க... "எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று வேண்டிக்கிட்டேன்" என்று கணவர் பதி ல் சொல்வார்.  

இது சமீபகாலமாக உலா வரக்கூடிய நகைச்சுவையாக இருந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தில் இருந்த, ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டு கணவன், மனைவி மனமொத்த தம்பதியராய் வாழ்வதை தினமும் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். இறைவனின் அருளாலேயே இல்வாழ்க்கைத்துணை அமைந்துள்ளது
என அனைவரும் சொல்வதை கேட்டிருப்போம். ஏழேழு பிறவிக்கும் இப்படியே வாழ்ந்திட வேண்டும் என்று பலர் வேண்டிக்கொள்ளவர்கள். அதனை நிறைவேற்றி கொள்ள இந்தப்பிறவியிலேயே வழியிருக்கிறது.

திரிவேணி சங்கமம்..

மூன்று கடல் .. மூன்று நதி இணையக்கூடிய இடங்களை தி ரிவேணி சங்கமம் என அழைக்கிறோம். அதிலும் அலகாபாத் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு உண்மை மனமொத்த தம்பதியர் ஏழேழு பிறவியிலும் தம்பதியராக இருந்திட வேண்டி செய்யும் பரிகாரமும்.

பெரும்பாலான தம்பதியருக்கு இதுபோன்ற பரிகாரங்கள் குறித்த விவரங்கள் தெரியாது எனினும் அங்கிருக்கும் ஞானிகள், பரிகார பூஜை செய்பவர்கள் முன்வந்து இதுபோன்ற தம்பதியரிடம் இதைச் சொல்லி செய்யும்படி சொல்கிறார்கள்.

இந்த பரிகாரத்தில் புனித நீராடிய தம்பதியர் வரிசையாக அமரவைக்கப்பட்டு கணவனின் மடியில் மனைவி அமரவேண்டும். மனைவியின் கூந்தலை கணவன் சீவி கூந்தலின் நுனியை கத்தரித்து, புண்ணிய நதியான கங்கையில் போடப்படுகிறது. பின்னர் மனைவி கணவனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பாத பூஜை செய்து, மனைவி கணவனின் காலை பிடித்தபடி எத்தனை பிறவிகள் நான் எடுத்தாலும் நீங்கள் தான் என்கணவனாக அமைய வேண்டும்... இறைவனிடம் நான் யாசித்து கேட்கும் இது நடந்திட வேண்டும். இது சத்தியம்.. என சொல்ல வேண்டும். கணவன் மனைவியின் மீது தலை வைத்து எனக்கு மீண்டும் பிறந்தால் என் வாழ்வில்
துணையாய் இருக்கும் நீயே என் மனைவியாக வரவேண்டும் என வேண்டி நான் வணங்கும் இறைவன் இதற்கு எனக்கு துணைபுரிய வேண்டும் இது சத்தி யம் என சொல்லவேண்டும்.

இப்படி தம்பதியரை உட்காரவைத்து பூஜை செய்திட அங்கு ஆட்கள் உள்ளனர். அவர்கள் மந்திரம் சொல்ல சொல்ல தம்பதியர் பூஜை செய்ய பூஜை முடிந்ததும்
அவர்கள் விரும்பும் தட்சணையை காணிக்கையாக செலுத்துவார்கள். அடுத்த பி றவி யி லும் மனிதனாக பிறந்திடுவோம்... நாமே இணைந்திருப்போம் என நம்பிக்கையுடன் திரும்பும்தம்பதியரின் மனதுக்குள் அக்கணமே ஒரு உறுதியான பந்தம் உருவாகும். அதுவரை அவர்களுக்குள் இருந்த சிறு பிணக்குகளும் அதற்கு பின் வரும் அவர்களது காலங்களில் சி றிதும் இருக்காது என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Success: பொன், பொருள், புகழ் உடனே கிடைக்க எளிய வழி.! நினைத்ததை நடத்தி காட்டும் எளிய பரிகாரங்கள்.!
Dream Home: இனி நீங்க வீட்டிற்கு வாடகை கொடுக்க தேவையில்லை.! 3 பரிகாரங்களை செய்தால் மூன்றே மாதத்தில் சொந்த வீடு.!