
கொன்றை மரம்
இந்த மரம் சரக்கொன்றை என்று அழைக்கபப்டும். இந்த மரம் கோடை காலங்களில் மஞ்சள் மலர்களால் நிறைந்து காணப்படுவது மட்டுமின்றி அமாவாசையன்று பூஜித்துவந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
மகிழ மரம்
இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால், குழந்தைகள் இம்மரத்தின் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும்.
பன்னீர் மரம்
இந்த மரத்தின் அடியிலோ அல்லது இதன் அருகில் வாகனங்களை நிறுத்தினால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. இந்த மரத்துக்கு சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் பூஜை செய்தால் நல்லது.
குறுந்த மரம்
இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படியாக பிராணப் பிரதிஷ்டை செய்து, நடு அறையில் கட்டி வைத்தால், வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள் அல்லது தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் அதிலிருந்து நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அரிசந்தன மரம்
இந்த மரத்தை திருவோண நட்சத்திர நாளில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டுவந்தால் தீமைகள் விலகி, நன்மை சேரும்.
பாரிசாதம்
தோஷங்களை நிவர்த்தி செய்யும் அத்ரி மலை..
நீண்ட ஆயுளுடன் இருக்க இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபடலாம். குழந்தைகள் இந்த மரத்தை அமாவாசை மூல நட்சத்திர நாளில் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பதும் நம்பிக்கை.
மந்தாரக மரம்
செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வெள்ளை மந்தாரை என்கிற மலரைத் தருகிற இந்த விருட்சத்தைச் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும். இந்த மரத்தை ‘கேட்டதைத் தரும் கல்பதரு’ என்றும் சொல்வார்கள்.
புன்னை மரம்
திருமண விருட்சம் என்கிற அபூர்வமான இந்த மரத்தை வெள்ளி, பௌர்ணமி ஞாயிற்றுக் கிழமைகளில் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
கருநெல்லி மரம்
திருமகள் வாசம் செய்வதாகச் சொல்லப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்கிற பெயரும் உள்ளது. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பௌர்ணமி நாளில் வழிபட்டால் வறுமைகள் நீங்கி, வளம் பெருகும்.
கண்ணனை அழைக்க தயக்கமா.. எப்படி கூப்பிட்டால் கண்ணன் வருவான்!
செண்பக மரம்
சௌபாக்ய விருட்சம் என அழைக்கப்படும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் வளங்கள் சேரும்.
பிராய் மரம்
இந்த மரத்துக்கு மின்னலைத் தாங்கும் விருட்சம் என்ற பெயரும் உள்ளது. பிராய் மரங்கள் நிறைந்திருந்த காரணத்தினால் தான் திருச்சியில் உள்ள திருப்பராய்த்துறை ஆலயத்துக்கு அந்தப் பெயரே நிலைத்தது.