தோஷங்களை நிவர்த்தி செய்யும் அத்ரி மலை..

By Dinesh TG  |  First Published Sep 8, 2022, 2:46 PM IST

ஆன்மீக ஞானத்தை பெற தியானம் செய்யுங்கள் என்றும் அதோடு உங்களையும் உணர்வீர்கள் என கூறுவார்கள். சித்தர்களும், முனிகளும், ஞானிகளும் அதிகாலையிலே எழுந்து இறைவனை நினைத்து வழிபடும் தியானத்திற்கு ஆற்றலும் அதிகம். ஆனால் ஒரு சிலர் தியானம் செய்யலாம்.. அதனை செய்ய மன அமைதி வேண்டுமே என நினைப்பவர்கள் முதலில் அத்ரி மலை சென்று வரவேண்டும். தியானம் கைகூடும். கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிரிக்கும்.
 


‘பொதிகை உச்சியிலே புறப்படும் தென்றல்’ என்று கூறுவார்கள். அப்படி சித்தர்களினால் பெருமை பெற்ற மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு படுத்தி தான் அத்ரி மலை. அத்ரி மாமுனிவர் தந்து சீடர்களுடன் இந்த மலையில் வசித்து வந்த காரணத்தினால் தான் இந்த மலைக்கு இப்பெயர் வந்தது.
இந்த மலையில் அத்ரி முனிவர், கோரக்கர், பிருகு முனிவர் போன்ற சித்தர்கள் தவம் புரிந்துள்ளார்கள். அகத்தியர் தமிழ் மொழியை பொதிகை மலையில் இருந்துதான் வளர்த்ததாக கூறுகிறார்கள். அத்ரி முனிவர் சித்திரசி கண்டிகள் என அழைக்கப்படும் ஏழு ரிஷிகளி ல் ஒருவராக இருப்பவர். உலகிற்கு வேத மந்திரங்களை வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.



அத்ரி மக்ரிஷி தான் ரிக், அஜூர், சாம, அதர்வண வேதமான நான்கில் ரிக் வேதத்தின் பல காண்டங்களை கொடுத்தார். இவர் ஜோதிடம் ஆயுர்வேத நூல்களையும் இயற்றி இருக்கிறார். இவர் பதஞ்சலி மகரி ஷிக்கு குருவாக இருந்து மானுட சரீர ரகசியங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் கடனா அணையை அடைந்து அங்கிருந்து 7 கிமீ அடர்ந்த காடுகளுக்குள் பயணிக்க வேண்டும். அகத்தியர், கோரக்கர் இணைந்த கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் சித்தர்கள் தியானம் செய்த இடமென்பதால் இங்கு அமர்ந்து கண் மூடி தியானம் செய்யும் போது மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு செய்யும் சிவவழிபாடு விசேஷமானது.
அத்ரி பரமேஸ்வரன் கோவில் கருவறையில் மூலவராக அத்ரி பரமே ஸ்வர்ன், அத்ரி பரமேஸ்வரி அருள்பாலிக்கிறார்கள். இவர்களுக்கு எதிரில் நந்தி தேவரும், கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி, தெய்வானை உடன் சுப்ரமணியாரும், பிள்ளையார், மகிஷா சுரமர்த்தினி, பிரகாரத்தில் அகத்தியர், அத்ரி, நாகதேவதைகள் அமைந்திருக்கின்றன. விஷ்ணு, பிரம்மா, தட்சிணா மூர்த்தி மூவரும் கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
இங்கிருக்கும் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமானை செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதம் இருந்து வழிபடுகிறார்கள். இங்கிருக்கும் நாக தெய்வங்களை வணங்கினால் நாக தோஷம் நீங்கும். ராகு கேது தோஷ பரிகாரம் செய்பவர்களுக்கு இந்த தலம் சிறந்த பரிகாரத்தலமாக இருக்கிறது.

கண்ணனை அழைக்க தயக்கமா.. எப்படி கூப்பிட்டால் கண்ணன் வருவான்!

அத்ரி மலை பரமேஸ்வரனை வழிபட்டால் கிரக தோஷங்கள் எதுவாயினும் நிவர்த்தி ஆகும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகவும், வாழ்வினில் மகிழ்ச்சி நிலைத்திடவும் அத்ரி மலை தரிசனம் நிச்சயமாக கை கொடுக்கும்.

Latest Videos

click me!