வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவன் தான் கண்ணன். தனது குறும்புத்தனத்தால் அனைவரின் இதயத்தை திருடி வைத்திருப்பதால் குறும்புகார கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறான். ஏதேனும் அபயம் என்னும் போது மனம் உருக கண்ணனை அழைத்தால் அடுத்து நொடியிலே வந்து காப்பாற்றும் கண்ணன் அவன். எங்கு எப்போது தீமை நடந்தாலும் பொறுக்காமல் அதனை பார்க்க ஓடி வந்து துயரத்தை தீர்ப்பதில் முதன்மையானவன்.
சரி.. இத்தனை துயரத்தின் போது வரும் கண்ணன்.. ஏன் மகாபாரதத்தின் போது பாண்டவர்களை காப்பாற்றாமல் போனான் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இது பாண்டவர்களுக்கும் அப்போதே இருந்தது. பாண்டவர்கள் சூதாட்டத்தின் போது நாட்டை இழந்து, மனைவியுடன் காட்டில் வசித்தார்கள் என எல்லோரும் பேசிகொண்டிருக்கும் போது பேச்சு கண்ணன் பற்றி திரும்பியது.
அப்போது பாண்டவர்களின் ஒருவரான் பீமன், "கண்ணன் ஒருவர் கஷ்டப்படும் போது கேட்காமலேயே உதவக்கூடியவன். ஆனால் நாம் சூதாட்டத்தில் தோற்கும் போது நமக்கு மட்டும் உதவவில்லையே, என்ன காரணமாக இருக்கும்" என்றான். சகாதேவனுக்கும், திரெளபதிக்கும் தவிர மற்றவர்களுக்கு பீமன் சொன்னது சரியாகவே இருந்தது. எல்லோரும் அதனை ஆமோதிக்கவும் செய்தனர். பிறகு சகாதேவனை பார்த்து நீ எதுவும் சொல்லவில்லையே என்றும் கேட்டார்கள்.
அலை பாயும் மனம் அமைதியடைய என்ன அபிஷேகம் செய்யணும் தெரியுமா?
சகாதேவன் அமைதியாக "நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் உண்மையாக ஆராய்ந்தால் தவறு நம்மீது தானே. துரியோதனனுக்கு சகுனி துணையிருந்தார். நாம் நமக்கு கண்ணனை துணைக்கு அழைத்திருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டு, தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தோல்வியுற்றோம் அப்போதும் கண்ணனை அழைக்கவில்லை. எங்கு கண்ணனை அழைத்தால் நமக்கு ஏதும் தெரியாது என எல்லோரும் ஏளனம் செய்வார்கள் என்றே தயக்கம் கொண்டு எல்லாவற்றையும் இழந்தோம். இப்படி கண்ணனை அழைப்பதற்கு போலி கவுரவம் பார்த்ததால் தான் இந்த நிலைமை உண்டானது. நாம் ஐந்து பேருமே உறூதியாக போலி கவுரத்தை பற்றி கொண்டோம். இதனால் நடந்த தவறுக்கு நாம் தான் முழு காரணம்" என்றான். ஆனால் அப்போதும் பாண்டவர்கள் சமாதானம் ஆகவில்லை.
Mantras : சக்தி மிகுந்தவையா மந்திரங்கள்?
சகாதேவன் அடுத்து திரெளபதி குறித்த விஷயத்துக்கு வந்தான். நாம் அனைவரும் தான் அப்படி வறட்டு கவுரவம் பார்த்தோம். ஆனால் திரெளபதி சிறிதும் யோசிக்காமல் தன்னை இழிவுபடுத்தும் போது கண்ணனை தான் அழைத்தாள். அவள் ஆடை இழந்த தருவாயிலும் எப்படியாவது கண்ணன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு கைகளை தூக்கி கண்ணா! கண்ணா! என்றாள். அவளது அபயத்தை கண்ணன் கேட்டான்.
திரெளபதியை காப்பது நமது கடமை என்பதை உணர்ந்த கண்ணன், அவளது மானம் சற்றும் குறையாமல் அவளை காப்பாற்றினான். இங்கு வெற்றி பெற்றது கண்ணனின் மீது திரெளபதி கொண்டிருந்த நம்பிக்கை. "எல்லாம் நீயே" என்று சரணடைந்து விட்டதால் திரெளபதியை காக்கும் பொறுப்பு கண்ணனுக்கு உண்டாகியது என்றான் சகாதேவன். திரெளபதியும் புன்னகைத்தாள். பாண்டவர்களும் தங்கள் தவறை உணர்ந்தார்கள்.
கடவுள் நம்பிக்கை இருக்கு, ஆனால் கடவுள் எதுவும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால் தவறு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.