நவராத்திரி ஸ்பெஷல் - அம்மன் அருள்பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்!!

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 11:20 PM IST
Highlights

நாம் அனைவரும் கோயிலுக்குச் செல்வது என்பது மனதில் உள்ள குழப்பத்தை நீக்கவோ அல்லது நற்காரியங்களில் வெற்றி பெற பிரார்த்தனை செய்யவோதான். மனிதரால் உதவ முடியாது என்ற நிலை வரும்போது நிச்சயம் நாம் கடவுளைத்தான் சரண் அடைவோம். 
 

நாம் அனைவரும் கோயிலுக்குச் செல்வது என்பது மனதில் உள்ள குழப்பத்தை நீக்கவோ அல்லது நற்காரியங்களில் வெற்றி பெற பிரார்த்தனை செய்யவோதான். மனிதரால் உதவ முடியாது என்ற நிலை வரும்போது நிச்சயம் நாம் கடவுளைத்தான் சரண் அடைவோம். 

அதேநேரத்தில் எல்லா கடவுள்களுக்கும் ஒரே மாதிரியான சாந்நித்தியம் இருக்காது. அந்தந்த தெய்வங்களுக்கு என்று உரிய ஸ்லோகங்கள், காயத்ரி மந்திரங்கள் உள்ளது. ஸ்தோத்திரங்கள் போன்றவையும் இருக்கின்றன.

மேலும் அந்தந்த தெய்வங்களின் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டும் வருபவர்கள் உண்டு. அந்த தெய்வங்களின் காயத்ரியைச் சொல்லி பூஜிப்பார்கள். ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து உரிய மலர்களைக் கொண்டு வணங்கி வருவார்கள். மந்திரங்களை உச்சாடனம் செய்து தங்கள் பிரார்த்தனையை முன்வைப்பார்கள்.

அப்படிதான் நவராத்திரி காலகட்டத்தில், ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான அம்பிகையரைத் துதிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அந்தந்த அம்பிகையை, உரிய ஸ்லோகம் சொல்லியோ ஸ்தோத்திரம் சொல்லியோ உரிய காயத்ரியைச் சொல்லியோ வழிபட அறிவுரை நடத்தியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?

ஆனால் ஒரு சிலர் ‘எனக்கு ஸ்லோகமும் தெரியாது, மந்திரமும் புரியாது’ என்று வருந்தலாம்.‘அம்பாளை வழிபட எனக்கு எந்த ஜபமும் தெரியாதே...’ என்று வருத்தப்படலாம். ஆனால் அதனால் எந்த கவலையும் தேவை இல்லை. மந்திரங்களோ அல்லது  ஸ்லோகங்களோ தெரியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். ஸ்தோத்திரங்கள் தெரியாதே என்று புலம்பவும் வேண்டாம்.

‘ஓம் லலிதாதேவியே நமஹ’ என்று இதை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னால் போதும். நவராத்திரி காலத்தில், தினமும் காலையும் மாலையும்  பூஜையறையில் அமர்ந்து, 108 முறை சொல்லி, அம்பிகையை வழிபடுங்கள். முடியும்போதெல்லாம் சொல்லுங்கள். அனைத்து நலன்களையும் தந்தருள்வாள் தேவி.

Navratri : தமிழகத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

இதுபோன்று 108 முறை சொல்லும் போது, அம்பாள் படத்திற்கோ அல்லது விக்கிரகத் திருமேனிக்கோ செவ்வரளி மலர்களோ அல்லது செந்நிற மலர்களோ கொண்டு அர்ச்சித்து ஆத்மார்த்தமாக வழிபடுவது இன்னும் விசேஷமானது. இல்லத்தில் சுபிட்சம் நிலவும். ஐஸ்வரியம் குடிகொள்ளும். சந்தோஷமும் நிம்மதியும் நிலைக்கும்.

நவராத்திரி நாளில் மட்டுமில்லாமல், எல்லா தினங்களும் சொல்லலாம். செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் இதனை சொல்லுங்கள். மாங்கல்ய வரமும், பலமும் தருவாள். மேலும் தேவி கடன் தொல்லையில் இருந்தும் தரித்திர நிலையில் இருந்தும் மீட்டெடுத்து அருளுவாள்.

click me!