அனைத்து வீடுகளிலும் காமாட்சி விளக்கு இருக்கும் காரணம் தெரியுமா?

Published : Sep 29, 2022, 11:14 PM IST
அனைத்து வீடுகளிலும் காமாட்சி விளக்கு இருக்கும் காரணம் தெரியுமா?

சுருக்கம்

பொதுவாக தமிழகத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளில் காமாட்சி விளக்கை  தவறாமல் காண முடியும்.  பூஜையறை விளக்கில் பிரதானமான விளக்கே காமாட்சி அம்மன் விளக்கு தான். எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும் ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது. அனைத்து விஷேஷங்களிலும் எதற்காக காமாட்சி விளக்கிற்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற சந்தேகங்கள் இருக்கும்.  

ஒரு சமயம் காமாட்சி அம்மன், உலக மக்களின் நன்மைக்காக கடும் தவம் புரிந்து இருந்தாள். அப்போது சகல தெய்வங்களும் அவளுள் அடங்கியது. அதனால் ஒருவர் காமாட்சி அம்மனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கான பலனை பெறலாம். நாம் இப்போது தெய்வங்களை புகைப்படம் வைத்து வழிபடுவது போன்று பழங்காலத்தில் புகைப்படங்களை கொண்டு தெய்வத்தை வழிபட வில்லை. அதற்கு மாறாக விளக்கேற்றி தான் தெய்வத்தை வழிபட்டனர். காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்து கொண்டு காமாட்சி விளக்கை ஏற்ற ஆரம்பித்தனர். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளலும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைத்தது.

விளக்குகளிலேயே மிக புனிதமானதாக கருதப்படும் காமாட்சி விளக்கை சிலர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்தும் வருகின்றனர். திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வளம் வருவதற்கும், புகுந்த வீட்டில் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் காரணம், அனைத்து தெய்வங்களின் அருளை ஒரு சேர பெறுவதற்கு தான். அதோடு குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குளம் தழைத்து வாழையடி வாழையாக வளரும் என்பது நம்பிக்கை.

Kantha Sasti Kavasam : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

 தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு   அரிசி மாவில் கோலம் ஒன்று போட்டு கொள்ள வேண்டும். அதன்பின்னர் அந்த  கோலத்தின் மேலே ஒரு சிறிய தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். அந்த காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். இந்த விளக்கிற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும். என்று குல தெய்வத்தையும் காமாட்சி அம்மனையும் மனதார 10 நிமிடங்கள் வேண்டிக்கொண்டு பிராத்தனை செய்ய வேண்டும். இப்படி உங்கள் வேண்டுதல்களை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தால் அம்பாள் மகிழ்ந்து வேண்டியதை அளிப்பாள் என்பது ஐதிகம். 

இந்த விளக்கு ஏற்றும் நேரம் பிரம்ம முகூர்த்தத்துக்குள் இருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது காலை 6 மணிக்கு முன்பு உங்களுடைய வீட்டில் நிறைவு செய்திருக்க வேண்டும். கடன் பிரச்சனை என்று மட்டுமல்ல, எதை நினைத்து உங்களுடைய வீட்டில் நீங்கள் இந்த பூஜையை தொடங்கினீர்களோ, அந்த வேண்டுதல் 48 நாட்களுக்குள் நிச்சயமாக நிறைவேறி இருக்கும். இதுபோன்று பல புனிதர்கள் நிறைந்த காமாட்சி விளக்கை தினம் தோறும் வீட்டில் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல சந்தோஷங்களும் பெருகும். வீட்டில் இருக்கும் கன்னிபெண்கள் இந்த வழிபாடு செய்தால்  மணம் போல் மாங்கல்யம் கூடும். 

PREV
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!