காவல் தெய்வம் கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு சீர்வரிசை எடுத்து வந்த போலீஸ்; தண்ணீர் விநியோகித்த இஸ்லாமியர்கள்

By Velmurugan s  |  First Published Feb 28, 2024, 5:30 PM IST

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியூர் மாரியம்மன் ஆலயத்திற்கு காவல் துறையினர் சீர்வரிசை எடுத்து வந்தனர். திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் விநியோகம் செய்தனர்.


கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்குவர். தேர்நிலைத் திடல் பகுதியில் துவங்கும் இந்த தேரோட்டம் ஒப்பணக்காரர் வீதி வழியாக பிரகாசம் வந்தடைந்து மீண்டும் தேர் நிலை சென்றடையும். 

Latest Videos

undefined

இந்நிலையில் வருடம் தோறும் கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்படும். அதன்படி இந்த வருடமும் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார். முன்னதாக கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடைவீதி காவல்துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.

நோயாளிகளுக்கான படுக்கையில் அமர்ந்து ஹாயாக காற்று வாங்கும் தெருநாய்; திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலம்

மேலும் தேர் திருவிழாவை முன்னிட்டு கலந்து கொள்ளக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டிலை கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக தேர் திருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து சமுதாய மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், கோவையில் வாழக்கூடிய அனைத்து இந்து, முஸ்லிம் சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற சாட்சியோடு இந்த நிகழ்வு நடைபெற்றது. 

click me!