சிலையே இல்லாத முருகன் கோவில் - எங்கு தெரியுமா?

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 11:35 PM IST

தமிழ்க்கடவுள் முருகன். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்பதை போன்று தான், “தமிழர்கள்” இருக்கும் இடமெல்லாம் முருகன் கோவில் கொண்டிருப்பார் என்று கூறலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கடல் வாணிபத்தில் உலகின் பல இன மக்கள் ஈடுபட்டிருந்த காலகட்டத்திலேயே அவர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழர்கள். 


தமிழ்க்கடவுள் முருகன். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்பதை போன்று தான், “தமிழர்கள்” இருக்கும் இடமெல்லாம் முருகன் கோவில் கொண்டிருப்பார் என்று கூறலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கடல் வாணிபத்தில் உலகின் பல இன மக்கள் ஈடுபட்டிருந்த காலகட்டத்திலேயே அவர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழர்கள். 

அப்படி தமிழர்களும் வியாபார காரணமாக பல நாடுகளுக்கு கடல் கடந்து சென்று, தங்கள் செல்வங்களை மட்டுமில்லாமல் தங்களின் பண்பாடு மற்றும் தெய்வ வழிபாடு முறைகளையும் கொண்டு சென்றனர். அங்கு சென்ற பின்பு தங்களின் கடவுள்களுக்காக கோவில்களும் உருவாக்கினர். அப்படி உருவாக்கப்பட்ட கோவில்களில் பெரும்பாலானவை முருகப்பெருமானுக்கு உரியதாகத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோவில் தான் “கண்டிக் கதிர்காம முருகன்” கோவில்.

Latest Videos

undefined

“கந்த புராணத்தின்” படி முருகப்பெருமான் வேடுவ குலப் பெண்ணான “வள்ளியை” இங்கு தான் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அடர்ந்த காட்டிற்குள்ளே இருந்த இக்கோவிலுக்கு,15 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும், முருகனின் பெருமை கூறும் ‘திருப்புகழ்” என்ற நூலை இயற்றியவருமான “அருணகிரிநாதர்” வருகை தந்தார். அவர் இக்கோவிலை முருகனின் புனித தளங்களிலில் ஒன்று என அறிவித்தார். அதனால் அன்று முதல் இன்று வரை இக்கோவிலுக்கு, தமிழர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபாடு செய்கின்றனர்.

பொதுவாக ஒரு கோவில் என்றால் அக்கோவிலின் கருவறையில் கல்லாலான “மூலவர்” சிலையோ, உலோகத்தாலான “உற்சவர்” சிலையோ இருப்பது தான் வழக்கம். ஆனால் இவை இரண்டும் இல்லாமல் இக்கோவிலில் தெய்வமான முருகன்,வள்ளி,தெய்வானை உருவம் வரையப்பட்ட துணியாலான “திரைசீலை” மட்டுமே உள்ளது. இத்திரைசீலையையே தெய்வமாக பாவித்து பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. 

பௌத்தர்களும், இக்கோவிலை “புத்தர் வந்து சென்ற இடம்” என்று கருதி இங்கு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட விசித்திரமான இந்த முருகன் கோவில் இலங்கையின் தென்பகுதியில், உவ மாகாணத்திலிருக்கும் “கண்டி” என்ற ஊரில் அமைந்துள்ளது.” 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் மன்னர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியதற்கான குறிப்புகள் மகாவம்சம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோயிலிற்கு இலங்கையையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இன்று சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.

நேரம் கிடைத்தால் இலங்கைக்கு சென்று இந்த முருகனை தரிசியுங்கள். 

click me!