இந்தாண்டு மாசி மாதம் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
கிரிவலம் என்றாலே நம் அனைவரது நினைவுக்கு முதலில் வருவது திருவண்ணாமலை தான். ஏனெனில் இங்குதான் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இது திருவண்ணாமலை கிரிவலம் அல்லது அருணாச்சல கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. இது தவிர பழனி, திருப்பரங்குன்றம் என பல இடங்களில் மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். குறிப்பாக, மலை மீது இருக்கும் எந்த கோவிலின் தெய்வத்தையும் வழங்கினால் கிரிவலம் வந்ததற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மாசி மாதம் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எதுவென்றால், 23 பிப்ரவரி மாலை 4.22 மணி முதல் 24 பிப்ரவரி மாலை 6.18 மணி வரை ஆகும். இதனால் கோவில் நிர்வாகத்தினர் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
இதையும் படிங்க: Masi Month 2024 Specials : மாசி மாதத்தின் முக்கிய விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள் பற்றி தெரியுமா..?
அதுபோல் மாசி பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது மட்டுமின்றி, பழநி, திருப்பரங்குன்றம் போன்ற மலையில் உள்ள கோவில்களுக்கு சென்று கிரிவலம் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும் கிரிவலம் வரும்போது சாதுக்களுக்கு அன்னதானம் கொடுத்தால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: மாசி மகம் பௌர்ணமி பூஜை.. இப்படி வழிபட்டால் செல்வம் அருளி உங்க பரம்பரையை அம்பாள் தழைக்க செய்வாள்..!
எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் சென்றால் கிடைக்கும் பலன்கள் என்ன?
ஞாயிற்றுக்கிழமை - சிவலோக பதவி கிட்டும்
திங்கள் கிழமை - புண்ணியம் கிடைக்கும்
செவ்வாய்க்கிழமை - கடன் தீரும், வறுமை நீங்கும்
புதன்கிழமை - முக்தி கிடைக்கும்
வியாழன் கிழமை - ஞானம் கிடைக்கும்
வெள்ளிக்கிழமை - வைகுண்ட பதவி மற்றும் குழந்தை பேறு கிடைக்கும்
சனிக்கிழமை - பிறவி பிணி போகும்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D