மாசி மகம் என்பது இந்து மதத்தின் புனிதமான பண்டிகளில் ஒன்றாகும். 7 பிறவிகளில் குவிந்துள்ள கர்மாவை அகற்ற இந்நாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அனைத்து மாதங்களிலும் பௌர்ணமி வரும். அவை ஒவ்வொரு வகையிலும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, பௌர்ணமி என்பது சிவபெருமான் மற்றும் முருகனை வழிபடுவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நாளில் மட்டும் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது என்பதால் அந்நாளில், விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் மற்றும் நினைத்தது அப்படியே நடக்கும்
என்பது ஐதீகம். அந்த வகையில், தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. ஏனென்றால், பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தான் நாம் மாசி மகம் திருவிழாவாக கொண்டாடுகிறோம். மகம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் இந்நாளில் பல கோவில்களில் தீர்த்த உச்சவம் நடைபெறும்.
இந்தப் பண்டிகை தூய்மைப்படுத்தும் சடங்குடன் தொடர்புடையது. மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட இந்நாளில் அனுசரிக்கப்படுகிறார்கள். இத்திருவிழாவின்போது புண்ணிய நதிகளிலோ அல்லது கடல்களிலோ நீராடுவது முக்கிய அடைவதற்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி தமிழ் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது. மேலும் இந்நாளில் வழிபடும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் கடல் கரைகள் ஆறுகள் அல்லது குளங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறும் மற்றும் மங்களகரமான நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மாசி மகம் அன்று கடல் ஆறு குளங்களில் நீராடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: மாசி மாதம் பௌர்ணமி 2024: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது தெரியுமா..?
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்பதால் இந்தியாவில் இருக்கும் 12 நதிகளில் நீராடலாம். குறிப்பாக தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் நீராடி, மாசி மகத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். மேலும் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக மாசி மகம் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மாசி மகம் 2024 : தேதி, நேரம் மற்றும் இந்த நாளின் சிறப்புகள் என்ன..?
2024 மாசி மகம் தேதி மற்றும் நேரங்கள்:
இந்த ஆண்டு மாசி மகம் பிப்ரவரி 24 சனிக்கிழமை அன்று வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6.51 வரை பௌர்ணமி திதி கொடுக்கலாம். அதுபோல், பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8.40 மணி முதல் பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. எனவே, பிப்ரவரி 24ஆம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் கடல், ஆறு மற்றும் குளங்களுக்கு சென்று புனித நீராடலாம்.
ஒருவேளை உங்களால் அங்கு சென்று புனித நீராட முடியவில்லை என்றால், வீட்டிலேயே விரதம் இருந்து சிவனையும் பார்வதையும் வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் உங்களது 7 ஜென்மம் பாவம் தீரும் என்பது ஐதீகம். அது போல் நீங்கள் சிவன் பார்வதி முருகனைத் தவிர பெருமாளையும் வழிபடலாம். பெருமாளை வழிபடும் முன் ஒரு கலச செம்பில் சுத்தமான தண்ணீர், கற்பூரம், துளசி மற்றும் வில்வம் இலை, விபூதி, வாசனை மலர்கள் ஆகியவற்றை கலசத்தில் போட்டு புனித நீராட வேண்டும். இப்படி செய்தால் சொந்த வீடு, நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு பெருமாளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மாசி மகம் கொண்டாடுவதால் கிடைக்கும் பலன்கள்:
ஏழு பிறவிகளில் குவிந்துள்ள கர்மாவை அகற்ற இந்த நாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாசி மகத்தை அனுசரிப்பதன் மூலம் பக்தர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் அவை..