தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் வந்தாச்சு..!!

Published : May 05, 2023, 09:56 AM IST
தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் வந்தாச்சு..!!

சுருக்கம்

தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் எவ்வாறு அமையும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

தனசு ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் சுக்கிரன். ஆறாம் வீட்டிற்கு ஆதிபத்தியம் பெறுவதால் சுக்கிரன், தனுசு ராசியில் மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12 ஆகிய ஏதாவது ஒன்றில் இருந்தால் சுக்கிரனால் ஏற்படும் தீயபலன்கள் குறையும். சுக்கிரனின் தசா, புத்திகளில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. ஆனால் சுக்கிரன் திசையில்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று நினைத்தால், லட்சுமி நாராயணன் கோவிலில் சுவாமி சன்னதியில் திருமணம் செய்யலாம். 


மேலும் நூறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, பசுவுக்கு தீவன வழங்குவது ஆகியவை மணமக்களின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனும், செவ்வாயும் ஆதிபத்திய சுபர்களாவார்கள். குறிப்பாக சூரியனும், செவ்வாயும் மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் சுப கிரகங்களான குரு புதன் ஆகியோருடைய பார்வை பெற்றால் சிறப்பான குடும்ப வாழ்க்கையும், அழகான அறிவான குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

சூரியனும், புதனும் சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோணங்களில் இருந்தார்களானால் பிரபலமான ராஜயோகம் அமையப் பெறுவார்கள். இவர்களது திருமணம் ஊர்மெச்ச விமர்சையாக நடைபெறும். தனுசு ராசிக்காரர்கள் இரண்டு மூன்றாம் வீட்டின் அதிபதியான சனி பகவான் 7, 8, 12ஆம் வீடுகளில் மறையாமல் இருந்தால் நன்மைகளை செய்வார். அவரே 3, 6, 11 ஆம் வீடுகளில் அமர்ந்தால் தன்னுடைய தசா புத்தி காலங்களில் செல்வச் செழிப்பைக் கொடுப்பார்.

தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திரன் நன்மை செய்யாது என்றாலும் கூட அவருடைய தசா புத்தி காலங்களில் அருகில் உள்ள சிவன் கோவில்களில், தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானுக்கு திங்கள் கிழமை தோறும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வளமான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பார். அதிகம் கெடுதல் செய்யாத கிரகம் சந்திரன் ஆவார் எனவே அவரைப் பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.ராகு கேதுவுடன் சேராமல் இருந்தால் பொதுவாக நல்ல பலன்கள் கொடுப்பார். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் திருமணத்தை கோயில்களில் வைத்துக் கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். மேலும்  தங்கள் திருமண விருந்திலே பச்சைப் பயறு இருக்குமாறு பார்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாக அமையும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!