
Mannarkovil Temple Three tiered Vishnu Rajagopala Swamy : பொதுவாக கோயிலில் பெருமாள் ஒரு கோலத்தில் தான் காட்சி தருவார். அது அனந்த சயனம், நின்ற கோலம் அல்லது அமர்ந்த கோலமாக கூட இருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் பெருமாள் 3 நிலைகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இப்படி ஒரே கோபுரத்தில் கீழ் பெருமாளை 3 நிலைகளில் தரிசிப்பது என்பது மிகவும் அரிதான மற்றும் புண்ணியமான விஷயமாக கருதப்படுகிறது.
11 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் மற்றும் 7 தூண்கள், 7 பிரகாரங்களால் அமைந்து, "மன்னார்குடி மதிலழகு" என்று போற்றப்படுகிறது. மூலவர் ஸ்ரீ வாசுதேவப் பெருமாள், செங்கமலத் தாயாருடன் வீற்றிருக்கிறார். உற்சவர் ராஜகோபாலசுவாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார்.
திருநெல்வேலி சீமையின் அதிசயம்: இராஜகோபால சுவாமி கோயிலில் இத்தனை சிறப்புகளா?
செங்கமலத் தாயார் சன்னதி, செண்பக விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் பெண் வடிவ கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலின் தீர்த்தம்ஹரித்ரா நதி என்று கூறப்படுகிறது புனித தளங்களில் இது ஒன்றாக கருதப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
இந்தக் கோயிலில் கீள் தளம், நடு தளம் மற்றும் மேல் தளம் என்று 3 நிலைகள் உள்ளன. இதில் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக ஸ்ரீ நாராயணப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இதே போன்று நடு தளத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், மேல் தளத்தில் ஸ்ரீ ரங்கநாதர் சயன கோலம் என்று சொல்லப்படும் பள்ளிக்கொண்ட கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினரும் சரி, திருமண பாக்கியம் நடக்க வேண்டுபவர்களும் சரி இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். நீண்ட நாள் நோய் தீர கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றி அற்புதம் நிகழ்த்திய மன்னார்!