மகா சிவராத்திரியில் எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளைப் பெற உலகின் எந்த மூலையிலும் செல்ல ஒவ்வொரு சிவபக்தர்களும் தயாராக உள்ளனர். புனித யாத்திரைக்கான ஸ்தலங்களில் குறிப்பிடத்தக்க ஸ்தலமான கைலாஷ் மானசரோவரும் அதில் ஒன்று. சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் கைலாய மலை பல வியத்தகு மர்மங்களை தன்னுள் கொண்டுள்ளது.
கைலாய மலையின் மர்மம்
- கைலாஷ் மானசரோவருக்கு செல்லும் யாத்திரை அவ்வளவு எளிதானதல்ல. இது உலகின் கடினமான யாத்திரைகளில் ஒன்றாகும். கைலாய மலையின் உயரம் மட்டும் இதற்கு காரணம் அல்ல. இங்கு நம்பவேமுடியாத பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். இந்த இடத்திற்கு அவ்வளவு ஆற்றல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- கைலாஷ் மானசரோவருக்கு செல்லும் யாத்திரை இரண்டு விஷயங்களுக்காக பரவலாக அறியப்படுகிறது. முதலாவது, கைலாய மலையை சுற்றி வருதல், இரண்டாவது மானசரோவரில் புனித நீராடுதல். இந்த காரியங்கள் யாத்ரீகர்களை எந்தப் பாவங்களிலிருந்தும் விடுவித்து முக்தியைத் தரும் என்பது ஐதீகம். இது தவிர கைலாஷ் மானசரோவரில் உள்ள மர்மமான விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
- கைலாஷ் மானசரோவர் இந்து மதத்தில் புனித ஸ்தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள கைலாய மலை சுமார் 22 ஆயிரத்து 28 அடி உயரம் கொண்ட பிரமிடு. இந்த மலை ஆண்டு முழுக்க பனியால் மூடப்பட்டிருக்கும். இந்த மலை மிகவும் பழமையானது. இங்கு ஒலி, ஒளி அலைகளை பரவுகின்றன. 'ௐம்' என்ற சத்தம் தன்னிச்சையாக வெளிப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கண்டு விஞ்ஞானிகளே வியந்து போய் உள்ளனர்.
- இந்த மலை அற்புதமான எழிலும், அமைப்பு உடையது. இந்த மலைக்கு செல்லும் பக்தர்கள் சொர்க்கத்திற்கு சென்றது போல பரவசம் அடைகின்றனர். இதன் மர்ம அதிசயங்களை யாராலும் புரிந்து கொள்ளமுடியவில்லை.
- கைலாய மலையின் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. இந்த மலையின் தெற்குப் பகுதி ரத்தினமாகவும், கிழக்குப் பகுதி படிகமாகவும், மேற்குப் பகுதி மாணிக்கமாகவும், வடக்குப் பகுதி தங்கமாகவும் கருதப்பட்டு வருகிறது.
- இந்த இடத்தை புராணங்கள் குபேர நகர் என குறிப்பிடுகின்றன. இதுவரை கைலாய மலையை எவரும் முழுதாக ஏறியதில்லை. அதாவது மலையின் உச்சியை சென்றடைந்த மனிதர்களே இல்லையாம். எவரெஸ்ட் சிகரத்தை விட தாழ்வாக இருந்தாலும், இதுவரை யாராலும் அதை அடைய முடியவில்லை என்பது ஆச்சர்யமே!
- இந்த மலையில் ஏற முயன்ற மனிதர்கள் பாதை பழுதடைந்ததாலோ அல்லது பனிச்சரிவு காரணமாகவோ மேலே முன்னேறி செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இது மட்டும் காரணம் இல்லை. கைலாய மலையின் மீது கதிரியக்கத் துகள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிவருகின்றனர். இதனால் இதை அடைவது கடினம் மட்டுமல்லாது முடியாத நிலையும் காணப்படுகிறது.
மானசசரோவர்
இந்த மலையின் நடுவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அதில் ஒன்று மானசரோவர், மற்றொன்று ராட்சதசரோவர் ஆகும். மானசரோவர் ஏரியில் செய்யும் தரிசனம் ஆன்மீக அமைதியைத் தருகிறது. இந்த ஏரி 320 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி உலகின் மிக உயரமான நன்னீர் ஏரியாகவும் சொல்லப்படுகிறது. இதனுடைய வடிவம் சூரியனை போலவே இருக்கும். இங்கும் 'ஓம்' என்ற சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடினால் ருத்ர லோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராட்சதசரோவர்
சிவனை நினைந்து ராவணன் கடுமையான தவம் செய்த ஏரிதான், ராட்சதசரோவர். இந்த ஏரி 225 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி காணப்படுகிறது. இதனுடைய வடிவம் சந்திரனை போல காணப்படும். இது மிக பெரிய உப்பு நீர் ஏரியாக கருதப்படுகிறது.
அற்புத விளக்குகள்
கைலாய மலையின் அற்புதங்களில் 7 வகை விளக்குகளும் அடங்கும். இந்த மலையில் உள்ள காந்த சக்திகள் வானை நோக்கி எழுந்து ஒளியை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் கூட நம்புகின்றனர். ஆனால் பக்தர்களோ அதை சிவபெருமானின் மகிமையாக கருதுகின்றனர். எது எப்படியோ, சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் கைலாய மலையில் மகா சிவராத்திரியன்று சென்று வந்தால் அற்புதங்கள் நடக்கும்..
இதையும் படிங்க: viral video: 3000 அடி உயரம்.. முரசு போன்ற மலையில் வீற்றிருக்கும் விநாயகர்.. தில்லாக பூசாரி செய்யும் காரியம்
இதையும் படிங்க: தாமிரபரணி நதிக்கரையோரம் வீற்றிருக்கும் நவகைலாயங்கள்... தோஷங்கள் விலக்கும் அதன் அதிசய வரலாறு தெரியுமா?