தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் காளி, குறவன், குறத்தி உள்ளிட்ட வேடங்களை அணிந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது குலசேகரன்பட்டினம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இந்த கோவிலில் மட்டுமே தசரா கொண்டாடப்படுவது மிகவும் புகழ் வாய்ந்ததாகும். பக்தர்கள் காளி, குறவன், குறத்தி, காவலர்கள் உள்ளிட்ட வேடங்களை அணிந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் தசரா விழா கொண்டாடப்படுவதால் உள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவதுண்டு.
தூத்துக்குடியில் இருந்து சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி
மேலும் வேடமணியும் பக்தர்கள் கடைசி மூன்று நாட்கள் தாங்கள் அணிந்த வேடத்துடன் தினசரி பணிகளை செய்கிறார்கள் 400-க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் கிராமம் கிராமமாக சென்று காணிக்கை பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் பேண்ட் வாத்தியங்கள், கிராமிய வாக்கியங்கள் இசைக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதுபோல் மும்பை டில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வேடமிட்டு காணிக்கை பெற்று வருகிறார்கள்.
போதையில் தகராறு செய்த கணவனை விஷம் வைத்து கொன்ற பெண்
குலசேகரன்பட்டினம் சுற்றி உள்ள அனைத்து ஊர்களில் தசரா குழு ஆட்டம் களைகட்டி உள்ளது. வேடம் போடும் பக்தர்கள் தாங்கள் நினைத்த வேடங்களை போடுகின்றனர். தாங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டி வேடம் போடும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. ஊர் ஊராக வலம் வந்து காணிக்கை பெற்று வரும் வேடம் அணிந்த பக்தர்கள் சூரசம்ஹாரம் நடைபெறும் 5ஆம் தேதி குலசேகரப்பட்டணம் வருகை தந்து முத்தாரம்மனுக்கு தங்களின் காணிக்கையை செலுத்தி விட்டு வீடு திரும்புவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற தசரா திருவிழா இந்த ஆண்டு முழு உற்சாகத்துடன் நடைபெறுகிறது.