ஈருடல் ஓருயிராய் இருக்கும் தம்பதியர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் கணவன் மனைவியாக ஆக வேண்டும் என்று வேண்டுவார்கள். கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும் தம்பதியருக்கு மத்தியில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறோம்.
ஈருடல் ஓருயிராய் இருக்கும் தம்பதியர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் கணவன் மனைவியாக ஆக வேண்டும் என்று வேண்டுவார்கள். கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும் தம்பதியருக்கு மத்தியில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறோம்.
ஒருவனுக்கு அமையும் மூன்று செல்வங்கள் முக்கியமானது. மனைவி, குழந்தை, வீடு பேறு என்று சிலர் சொல்வார்கள். இல்வாழ்க்கைத்துணை இனிமையாக அமைந்திருந்தால் அவர்கள் துன்பமான தருணங்களிலும் கூட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். ஏழேழு பிறவிக்கும் நீ தான் துணையாக வேண்டும் என்று சொல்லும் தம்பதியர் அதை உறுதி செய்ய இந்த பிறவியேலேயே வழி உண்டு. ஆம் திரிவேணி சங்கமம் என்னும் இடத்தில் தான் நீங்கள் உங்க ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மூன்று கடல் மூன்று நதி இனையும் இடங்கள் திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறோம். அங்கு உயர்விலும் சிறப்பிலும் மேன்மையாக உள்ள அலகாபாத் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் நீங்கும் என்று சொல்வர்கள். அதே போன்று மனமொத்த தம்பதியர் ஏழேழு பிறவிக்கும் தம்பதியராய் இருக்க விரும்பினால் இங்கு பரிகாரம் செய்தால் பலிக்கும் என்பது ஐதிகம்.
ஆயுதபூஜை வந்த கதையும் வழிபடும் முறையும்!
அங்கு செல்லும் தம்பதியருக்கு அங்கிருக்கும் ஞானிகள் பரிகார பூஜை செய்பவர்கள் முன் வந்து இந்த பரிகாரத்தை செய்யும் படி சொல்கிறார்கள். அதன்படி தம்பதியரும் செய்து கொள்கிறார்கள். பரிகாரத்தின் போது தம்பதியர் புனித நீராடி வரவேண்டும். பிறகு அவர்களை வரிசையாக உட்கரா வைக்கிறார்கள். கணவனின் மடியில் மனைவி உட்கார வேண்டும். பிறகு மனைவியின் கூந்தலை கணவன் சீவி கூந்தலின் நுனியை சிறிது கத்தரிக்க வேண்டும். அதை புனித நதியான கங்கையில் போடப்படுகிறது. பிறகு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். கணவனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பாத பூஜை செய்ததும் மனைவி கணவனின் கால்களை பிடித்தபடி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்களே என் கணவனாக அமைய வேண்டும். என்று கூறி இறைவனிடம் நான் யாசித்து கேட்கும் இது நடக்க வேண்டும். இது சத்தியம் என்று சொல்ல வேண்டும்.
தடைப்பட்ட திருமணம் கைகூட திருமணக்கோல வெங்கடாஜலபதியை தரிசியுங்கள்!
அதே போன்று கணவனும் எனக்கு மீண்டும் மனித பிறவி வாய்க்குமானால் என் வாழ்க்கையில் இரண்டற கலந்து இன்ப துன்பத்தில் பங்கு கொண்டு மனமொத்தவளாய் உள்ள நீயே என் மனைவியாக வேண்டும். இதற்கு நான் வணங்கும் இறைவன் எனக்கு துணை நிற்க வேண்டும். இது சத்தியம் என்று சொல்ல வேண்டும். இப்படி வரிசயாக தம்பதியரை உட்காரவைத்து பூஜை செய்ய அங்கு ஆட்கள் உண்டு. பூஜை முடிந்ததும் தம்பதியர் காணிக்கை செலுத்தலாம். இது அவர்களது விருப்பபடி என்பதால் கட்டாயமில்லை.
இந்த பூஜைக்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் அடுத்த ஜென்மத்தில் நாமே இணைந்திருப்போம் என்னும் நம்பிக்கையும் அதை தொடர்ந்து அன்பும் ஊற்றெடுக்கும். இதுவரை அவர்களுக்கு இருந்த சிறு சிறு சச்சரவுகளும் வரும் காலங்களில் அவர்களுக்கு இருக்காது. இந்த புண்ணிய தலங்களுக்கு பிறகு அவர்களுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அதனால் இயன்றால் இப்போதே பிரயாக்ராஜ் புண்ணியதலத்துக்கு செல்லுங்கள். கணவன் மனைவிக்குள் தீர்க்கவே முடியாத சிக்கல்கள் நிச்சயம் தீரும்