
நவகிரகங்களில் முக்கிய கிரகமாக இருப்பது இந்த சனி பகவான் நமது வாழ்க்கையில் எப்படியாவது ஒரு முறையாவது நம்மளை ஆட்டி வைப்பார். நம் ஜாதகத்தில் ஏழரை சனி வந்துவிட்டால் நம்மளுக்கு துன்பம் கவலை உடல்நல பாதிப்பு அனைத்திலும் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகவும் அதிலிருந்து நம்மளை விடுவிக்க ஒரு முறையாவது குச்சனூர் சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று வந்தால் நம்மை விட்டு சனீஸ்வரன் நீங்கி விடுவார் என்று கூறப்படுகிறது இக்கோயிலின் வரலாறு சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது குச்சனூர் சனீஸ்வரன் கோயில்.தமிழகத்தில் சனி பகவானுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புமிக்க சுயம்பு ஸ்தலம் ஆகும்.சனி பகவான் பிடித்து, ஏழரை ஆண்டுகள் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடுவார்.2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது கிடையாது. இங்கு சனீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர் என்பதால் இவருக்கு கும்பாபிஷேகம் கிடையாது.
அம்மை நோய் மற்றும் கண் திருஷ்டியை நீக்கும் பண்ணாரி அம்மன்! நோய் தீர்க்கும் அற்புதத் தலம்!
குச்சனூர் சனீஸ்வரர் கோயிலின் வரலாறு: குழந்தை வரம் வேண்டிய அரசன் தினகரன்: செண்பகநல்லூர் என்ற பகுதியை தினகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அவன் குழந்தை வரம் வேண்டி இறைவனை தினமும் மனம் உருகி வேண்டி வந்தான் ஒருநாள் அவர் இறைவனை வேண்டி தியானத்தில் இருந்து கொண்டிருந்தபோது அவனது வீட்டிற்கு ஒரு அனாதை சிறுவன் வருவான் என்றும் அவனை தத்தெடுத்து வளர்த்து வரவேண்டும் என்றும் அவன் வந்த சில காலத்தில் தினகரனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் ஆசாரி சொன்னார். தேடி வந்த தத்து பிள்ளை: சில நாட்களுக்கு இடையே அந்த ஆசாரி சொன்னபடியே ஒரு அனாதை சிறுவன் அரண்மனைக்கு வந்தான் தினகரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் ஒளி வீசும் அழகுடன் சந்திரன் போல் காணப்பட்ட அந்த சிறுவனை தத்தெடுத்த மன்னன் அவனுக்கு சந்திரவதனன் என்ற பெயர் சுட்டி அன்புடன் வளர்த்து வந்தான் சில மாதங்களுக்குப் பிறகு அரிசிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தான் அரசனும் அரசியும் அக்குழந்தைக்கு சாதகன் என்ற பெயர் சூட்டினார் இரண்டு குழந்தைகளுமே நன்கு வளர்ந்து சகல கலைகளையும் கல்விகளையும் கற்றுத் தேர்ந்தனர். ஆனால் அரசகுமாரனை விட சந்திரவதனன் அறிவிலும் ஆற்றுதிலும் மிகவும் சிறந்து விளங்கினான். இதை கண்ட மன்னன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் சந்திரவதனுக்கே முடி சூட்டி அடுத்த அரசனாக அறிவித்தார்.
அரசனுக்கு ஏற்பட்ட சனி தோஷம்: சந்திரவதனன் செண்பகநல்லூரில் நல்லாட்சி புரிந்து வந்த நிலையில் அவனது வளர்ப்பு தந்தியான தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது அதனால் தினகரன் நாள்தோறும் பல துன்பங்களை அனுபவித்தான் தன்னை அன்புடன் வளர்த்த அரசனாகிய தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத சந்திரவதனன் தன் தோஷத்தில் பாயும் சுரபி நதிகளுக்குச் சென்று அங்கு சனி பகவானின் இரும்பாலான உருவத்தை பிரதிஷ்டை செய்து தனது தந்தைக்கு வரும் சோதனைகளை நீக்க வேண்டி வழிபாடு துவங்கினான்.
தப்பிக்க முடியாத தண்டனை: சந்திரவதனனின் வழிபாட்டில் மனமிரங்கிய சனி பகவான் அவன் முன் தோன்றி ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்படியே இப்பிறவியில் ஒருவனுக்கு சனி திசை நடக்கும் காலகட்டத்தில் தண்டனை கிடைக்கிறது அவரவர் வினை தீர்ப்ப இந்த ஏழரை ஆண்டுகள் பல துன்பங்களை அவர் அனுப்பித்து தீர வேண்டும் இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது ஆனால் சனிதோச பிடித்த இந்த ஏழரை ஆண்டுகளிலும் எத்தனையோ தோசங்கள் வந்தாலும் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எவர் ஒருவர் தங்கள் கடமையிலிருந்து தவறாமல் ஒழுக்க நெறி கிளறாமல் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் வாழ்கிறார்களோ அவர்களின் முற்பிறவி தீமைகள் அனைத்தும் கிழிந்து ஏழரை சனி தோச முடிவில் அவர்களது நற்செயல்களுக்கு ஏற்ப மிகப்பெரிய நற்பண்பாங்கையும் நிச்சயம் அடைவார் உன் தந்தை தினகரன் அவரது முற்பிறவி பாவ வினைகளுக்கான தண்டனையை தற்போது அனுபவித்து வருகிறார் அதை உன்னால் மாற்ற முடியாது எனவே வேறு ஏதும் வரவேண்டும்னால் கேள் என்றார் சனி பகவான்.
தீராத வினைகளைத் தீர்க்கும் அறுபடை வீடுகள்! எந்தப் படைவீட்டில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?
தந்தையின் துன்பங்களை தன் துன்பமாக ஏற்றுக்கொண்ட சந்திரவதனன்: சந்திரவதனனே தந்தை மேல் இருந்து அளவற்ற அன்பினாலும் நன்றி உணர்வாலும் சனி தோச காலத்தில் அவருக்கு வரும் துன்பங்களை அனைத்தையும் தனக்கு அருளும்படி சனி பகவானுடன் வேண்டினான் ஒரு மகனாக அவரது தேசம் செல்வம் மட்டுமின்றி அவரது முற்பிறவி வினைகளையும் தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று மனம் உருக வேண்டிக்கொண்டான் அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனி பகவான் தந்தைக்கு பதிலாக சந்திரனை பிடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது மேலும் அவனது உயர்ந்த அன்பினால் ஏழரை ஆண்டு துயரம் ஏழரை நாழிகை காலமாக குறைக்கப்பட்டது ஆனால் சனி தோஷம், பிடிக்கும் அந்த ஏலரை நாழிகை காலம் மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் தாங்க முடியாத பல துன்பங்கள் வரும் என்றும் அந்த துன்பங்களை எல்லாம் அவன் அனுபவித்து தீர வேண்டும் என்றும் எச்சரித்தார் சந்திரவதனன் மகிழ்ச்சியோடு அதை சம்மதித்தான்.
சனி பகவானின் அருள்: சந்திரவன்தனின் வேண்டுகோளின் பிடியே ஏழரை நாள் நாழிகை காலத்திற்கு கடுமையான பல துன்பங்கள் கொடுக்கப்பட்டன அதனை துன்பங்களையும் தன் வளர்ப்பு தந்தைக்காக ஏற்றுக்கொண்ட சந்திரவதனின் முன் சனி பகவான் மீண்டும் தோன்றி உன் தந்தையின் துயர் நீங்க வேண்டும் என்ற உன் உயர்ந்த நோக்கத்தாலும் பக்தியாலும் அவரின் முற்பிறவி வினிகளும் சனிதோசமும் நீங்க பற்றன உனது நல்ல வினை நாள் நீ சகல நன்மையும் அடைவாய் என வாழ்த்தினார் மேலும் சனி தோஷம் பிடித்த எவராலும் இங்கு வந்து நீ தங்கள் குற்றங்களை உணர்ந்து அதற்கான தண்டனைகளை மன ம் உடைய ஏற்றுக்கொண்டு இனி எந்த பாவமும் செய்ய மாட்டேன் என்று கூறினால் அவர்களுக்கு சனிதோஷத்தில் இருந்து வரும் துன்பங்களை குறைந்து முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று சனி பகவான் அந்த இடத்திலேயே சுயம்புலிங்கமாக மாறினார். அதுதான் குச்சனூர் சனீஸ்வரன் கோயில் என்று புராணம் கூறப்படுகிறது.
அறுபடை வீடுகளும் அதன் அபூர்வ பலன்களும்! நீங்கள் தரிசிக்க வேண்டிய முருகனின் புனிதத் தலங்கள்!