தேய்பிறை அஷ்டமி சிறப்பு! கண்டிக்குப்பம் பைரவரை ஒருமுறை தரிசித்தால் தலையெழுத்தே மாறும் அதிசயம்!

Published : Jan 20, 2026, 03:00 PM IST
Krishnagiri Kandikuppam Kala Bhairavar Temple Ashtami Special Tamil

சுருக்கம்

Krishnagiri Kandikuppam Kala Bhairavar Temple Ashtami Special Tamil : கிருஷ்ணகிரி அருகே உள்ள கண்டிக்குப்பம் கால பைரவர் கோயிலின் சிறப்புகள் என்ன என்பது பற்றியும், அஷ்டமி நாளில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான காரணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

Krishnagiri Kandikuppam Kala Bhairavar Temple Ashtami Special Tamil : கிருஷ்ணகிரி மாவட்டம் கண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ஆன்மீகத் தலம் தான் ஸ்ரீ பைரவர் நிலையம். இங்கு வந்து வழிபாடு செய்ய என்னென்ன பலன்கள் கிடைக்கும், கோயில் வரலாறும், மகத்துவம், சிறப்புகள் என்ன என்பது பற்றி முழுமையாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

இளம் துறவியால் உருவாக்கப்பட்ட கோயில்:

ஒரு இளம் துறவி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு நாள் கனவில் நீ திருவண்ணாமலைக்கு வா என்று கூற அவரும் கால்நடையாகவே திருவண்ணாமலைக்கு சென்றிருக்கிறார். அப்பொழுது திரும்பி வருவதற்கு போதிய பணம் இல்லாததால் ஊர் திரும்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு வயதுடைய கிழவன் உருவத்தில் ஒருவர் வந்து ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என்று கேட்க என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. என் ஊருக்கு திரும்பிச் செல்ல காசு இல்லாததால் இங்கு அமர்ந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அந்த வயதான கிழவர் கையில் பணத்தை கொடுத்து நீ ஊருக்கு போ என்று சொல்லி இருக்கிறார். 

மண்ணே மருந்தாகும் அதிசயம்! தீராத நோய்களைத் தீர்க்கும் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயில் வரலாறு!

சிறிது நேரம் கழித்து அவர் பார்க்க அந்த இடத்தில் ஒரு நபர் கூட இல்லையா அப்போது அவருக்கு அந்த திருவண்ணாமலையாரே வந்து பணம் கொடுத்தது போல் இருந்தது என்று கூறுகிறார். அவர் மீது பற்று இருந்தால் அவர் துறவியாகவே மாறிவிட்டார். அவர் அதனால் முதலில் சிவலிங்கத்தை வைத்து ஒரு கோயில் எழுப்பி இருக்கிறார் அதன் பிறகு காலபைர்வர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். கால பைரவருக்காகவே ஒரு தனி கோயிலை உருவாக்கியுள்ளார். அந்த கோயிலில் மூவராக இருப்பவர் கால பைரவர். உக்கிரமான கால பைரவர் என்று கூறப்படுகிறது. அந்த இளம் துறவியின் பெயர் செந்தில்குமார் என்று சொல்லப்படுகிறது. அந்த இளம் துறவியை அந்த கோயிலில் ஸ்ரீ கால பைரவர் சுவாமி என்றே அழைக்கப்படுகிறார்.

கால பைரவர் சுவாமி செய்யும் நன்மைகள்:

ஸ்ரீ கால பைரவர் நிலையம் ஒரு தியான ஆலயமாக திகழ்கின்றது இந்த ஆலயத்திற்கு மன அமைதியைத் தேடி செல்பவருக்கு ஒரு சிறந்த தலமாக அமைகிறது. அங்கு வருபவர்களுக்கு அவர் முழுவதும் அன்னதானம் செய்து வருகிறார். 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

மாணவர்களுக்கு போதனைகள்:

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆண்கள் பெண்களுக்கும் கூட இங்கே தமிழ் புராணங்களான புறநானூறு போதிக்கப்படுகிறதாம்.

சிவ துறவிகளுக்கு உதவுதல்:

63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் விழா நடக்கப்படுகிறது. அந்த விழாக்கு சிவனடியார்களை அழைத்து அவர்களுக்கு உணவு உடை பணம் காலணி போன்றவை இலவசமாக கொடுக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை நடப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்தக் கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனராம்.

சீதையைத் தேடி வந்த இராமருக்கு வழி காட்டிய ஈசன்; போரூர் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில் வரலாறு!

கோயிலின் சிறப்புகள்:

ஸ்ரீ பைரவா நிலையம் ஆலயத்தில் மூலவராக இருப்பது ஸ்ரீ கால பைரவர் தான். தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அவருக்கு பின்புறத்தில் இருக்கிறார் சிவலிங்கம் திருவண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்திற்கு மக்களே அபிஷேகம் செய்யும் முறை இங்கு உள்ளது. அது மக்களுக்கிடையே பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமிறி 63 நாயன்மார்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

பாதாள பைரவர்:

கோயிலில் மர்மமாக பாதாள பைரவர் என்று பாதாளத்துக்குள் ஒரு பைரவர் வழிபடுவதாக கூறப்படுகிறது ஆனால் அது மக்களுக்கு அனுமதி இல்லை. அந்த கோயிலில் நடத்தி வரும் பைரவ சாமி மட்டுமே அந்த வைரவரை வணங்கி வருவதாக கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சிக்கு முன் செல்ல வேண்டிய சிவன் கோயில்: எந்த கோயில் தெரியுமா? போரூர் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில்!

பலன்கள்:

இந்த கோயிலுக்கு சென்று வந்தால் பைரவரின் அருள் பெற்று நம் கடனிலிருந்து தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது தொழில் ரீதியாகவும் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்த கோயில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது ஒரு மனிதன் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறானோ இந்த கோயிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கூறப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கால்நடைகளுக்கு காவல் தெய்வமாக இருக்கும் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா? ஆல்கொண்டமால் கோயில்!
சீதையைத் தேடி வந்த இராமருக்கு வழி காட்டிய ஈசன்; போரூர் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில் வரலாறு!