
நவகிரகங்களில் ஒன்றான புதன் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை என கூறப்படுகிறது. கோயிலுக்கு சென்று வழிபட்டால் பேச்சாற்றல் படிப்பாற்றல் கல்வி அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள் என்று கூறப்படுகிறது. முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னை குன்றத்தூர் அருகே கோவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற நவகிரகங்களில் ஒன்றான புதனுக்குரிய ஸ்தலமாக சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மூலவராக சுந்தரேஸ்வரர் தாயாராக ஸ்ரீ சௌந்தர் அம்பிகா ஆகிய இருவரும் அருள் பாலித்து கொண்டு இருக்கின்றனர். விருட்சமாக மகா வில்வத்தை கொண்டிருக்கிறார் சுந்தரேஸ்வரர். இந்தக் கோயில் சென்னை போரூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் கோவூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்? தோஷங்களை நீக்கி யோகம் தரும் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்!
கோவூர் கோயிலின் வரலாறு:
காமாட்சி அம்மன், பஞ்சாக்னியில் அதாவது நெருப்பில் தவம் செய்து கொண்டிருந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. காமாட்சி அம்மனின் தவம் மிகவும் உக்கிரமாக இருந்ததால், சுற்று முற்றும் வெப்பமாக மாறி, இந்த அதீத வெப்பத்தால் எல்லா உயிர்களும் துன்பப்படத் தொடங்கின. ஆனால், சிவன், தன் கண்களை மூடி ஆழ்ந்த தியானம் செய்து வருவதால், சிவன் இதை உணரவில்லை. எனவே, தவத்தின் வெப்பத்தில் இருந்து உலகைக் காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர் முனிவர்கள், தேவர்கள்.
மகாவிஷ்ணு, மகாலட்சுமியை உலகைக் காக்கும்படி கட்டளையிட்டார். இந்த இடத்திற்கு பசு வடிவில் வந்த ,மகாலட்சுமி, ‘உலகே காப்பாற்றப்பட வேண்டும் என்று சிவனிடம் வேண்டி, சிவனை வணங்கி, வேண்டிக்கொண்டார். தேவியின் பிரார்த்தனையால் மகிழ்ந்த சிவபெருமான், தன் கண்களை திறந்து, அந்த இடத்தின் வெப்பம் தணிய, குளிர்ச்சியை அடைந்தார். ஸ்ரீமகாலட்சுமி பசு வடிவில் இங்கு வழிபட்டதால் இத்தலம் கோபூரி என்றானது. அதாவது தமிழ் மொழியில் கோ என்றால் பசு. நாளடைவில் கோபூரியானது கோவூர் என பெயர் பெற்றது.
தீராத கடன் மற்றும் பயம் போக்கும் சக்தி வாய்ந்த தலம்; ஸ்ரீ கால பைரவர் வழிபாடு!
கோயிலின் சிறப்புகள்:
சென்னையில் உள்ள நவகிரக கோயில்களில் கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்று. இங்கு மூலவராக இருப்பவர் ஈஸ்வரர் இங்கு அம்மையார் சன்னதியில் உள்ளது. சௌந்தர் அம்பிகா தாயார் இவருக்கின்றி தனி சன்னதி ஒன்று உள்ளது. ராஜகோபுரங்கள் இருந்த அழகிய கோயில். இக்கோயிலில் வீரபத்திரர், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். நவகிரகங்கள் உள்ளன. 63 நாயன்மாரும் இங்கு உள்ளனர். அருகில் உள்ள ‘குன்றத்தூர் என்ற ஊரில் பிறந்த சேக்கிழார், இந்த கோயிலிலிருந்துதான் ‘பெரிய புராணம் எழுதத் தொடங்கினார் என்று புராணங்களில் கூறப்படுகிறது.
சீதையைத் தேடி வந்த இராமருக்கு வழி காட்டிய ஈசன்; போரூர் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில் வரலாறு!
பலன்கள்:
புதன் கிரகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் சிறப்பு என்று கூறப்படுகிறது. கல்வியிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்க சுந்தரேஸ்வரரை வந்து வழிபாடு செய்யலாம். வழக்கறிஞருக்கு படிக்க விரும்புபவர்கள் இங்கு வந்து சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தால் நாம் நினைத்ததை அடையலாம் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.