
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது.இது 11-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரான செண்பக பாண்டியனால் கட்டப்பட்டது.
வரலாறு:
சிவன் பார்வதி தேவிக்கு,காட்சி அளித்து திருமணம் முடிக்க வந்தார் . ஈசனின் திருமணம் காண அனைவரும் கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.
அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின்
வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும். அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.
முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் பூவன நாதசுவாமி என்று அழைக்கப்பட்டார்.
அம்பாள் செண்பகவல்லி:
அம்பாள் செண்பகவல்லி ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் தங்கையே இகழ்ந்தால் ஈசன் அம்பாலை அறிவுக்கு அழைத்து வர சென்று தங்கையை பேரழகுடைய புண்ணாகவும் பின் சிவனாகவும் காட்டினார் அதை கண்ட அம்பாள் அகந்தையை இறந்தாள் அதன் பிறகு அம்பாள் அருள்தரும் அன்னையாக மாறினார் 7 அடி உயரத்தில் சிலையானால் அவருக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டப்பட்டது அதன் பின்னர் மக்களுக்கு கேட்ட வரங்களை கொடுக்கும் செண்பகவல்லி என்னும் காட்சி தந்தார்.
கோயிலின் சிறப்புகள்:
இங்கு அம்பாள் செண்பகவல்லி மற்றும் பூ வண்ண நாத சுவாமி ஆகிய இருவருக்கும் தனி தனி சன்னதி உள்ளது. இங்கு விநாயகர் நாகர்கள் நந்தியுடன் சுவாமி அம்மன் ஆகியோர் உருவங்களாக உள்ளனர் இங்கு சிறப்பாக இருப்பது அகத்தியர் தீர்த்தம் கிடைக்கிறது அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது
பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கோயில்:
செண்பக பாண்டியன் என்னும் மன்னன் வெம்பக்கோட்டை பகுதியை ஆண்டு வந்தார் கனவில் சிவபெருமான் தோன்றி கோவில் லிங்கம் காணப்படும் அந்த லிங்கத்திற்கு பூவன நாதசுவாமி என்று பெற்றவர் அவருக்கு கோயில் எழுப்பு என்று சிவன் கூறிய கூறினார். அதன்படியே செண்பகப் பாண்டியன் மன்னனும் கோயிலெழுப்பி வழிபாடு செய்து வந்தார் அதன் பிறகு மக்களும் அந்த கோயிலுக்கு வழிபட்டனர்.
கோவிலின் பலன்கள்:
கோயிலில் தாயாராக இருந்து வரும் செண்பகவல்லி அம்மையார் தூங்கினால்குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைத்தால் பெண் குழந்தை பிறந்தால் செண்பகவல்லி என்னும் பெயர் வைக்கும் பழக்கமும் இந்த கோவில்பட்டி ஊரில் வழக்கமாக இருந்து வருகிறது. நோய் நொடியில் இருந்து தீர்வு பெறுவதற்கு இந்த கோயில் சிறந்த தளமாக அமைகிறது.
கும்பாபிஷேகம்:
ஜனவரி 25 நாளன்று இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நீண்ட நாளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இங்கு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.