இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் பக்தர்களின் வசதிக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். மேலும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் பின்வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
undefined
இதையும் படிங்க;- கார்த்திகை தீபம் 2023 : தவறுதலாக கூட இந்த முறையில் தீபம் ஏற்றாதீர்கள்.. மோசமான இழப்பு நேரிடலாம்!
* குற்றச் செயல்களை கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்கள்.
* திருட்டு கொள்ளை குறித்து 10 இடங்களில் LED Screen மூலம் விழிப்புணர்வு காணொளி
* காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய 35,000 Wrist bands
* தலைமையக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க 19 இடங்களில் 50 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* தகவல் தொடர்பினை மேம்படுத்த கூடுதலாக 4 செல்போன் டவர்கள் மற்றும் 7 Mobile Interceptor வாகனங்கள்.
* பக்தர்களின் சேவைகளுக்காக காவலர்கள் எளிதில் புலப்பட 50 இடங்களில் 4 அடி உயரம் கொண்ட உயர் மேடைகள்.
* கார்களை நிறுத்துமிடம் குறித்து அறிய Push Message வசதி
தீபத் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில்கொண்டு கீழ் காணும்படி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- Karthigai Deepam 2023 : கார்த்திகை மாதம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது பலன் தருமா?
வேலூர் சாலை:-
திருவண்ணாமலை - வேலூர் சாலையானது ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி ஆகிய வழித்தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை தீபம் நகர் ரிங் ரோட்டிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி, அவலூர்பேட்டை ரிங்ரோடு ஜங்சன் ரயில்வே கேட் வழியாக அண்ணா ஆர்ச் தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். அண்ணாஆர்ச் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தென்றல்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீபம்நகர் வழியாக செல்லும்.
அவலூர்பேட்டை சாலை:-
காஞ்சிபுரம், வந்தவாசி, அவலூர்பேட்டை, சேத்பட்டு ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு முன்பு SRGDS பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்.
திண்டிவனம் சாலை:-
சென்னை, புதுச்சேரி, செஞ்சி ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை மார்க்கெட்டிங் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள பேருந்துகள் ரிங்ரோட்டில் உள்ள ஆறுமுகநார் நகர் காலி இடத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்லும்.
வேட்டவலம் சாலை:-
வேட்டவலம், விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு ஏந்தல் கிராமத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
திருக்கோவிலூர் சாலை:
திருக்கோவிலூர் பண்ருட்டி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வந்து சேரும். பேருந்துகள் அதிகப்படியாகும் பொழுது நெய்வேலி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் வழித்தடப் பேருந்துகள் அருணை மருத்துவக்கல்லூரி எதிரில் உள்ள மைதானத்திற்கு அனுப்பப்படும்.
மணலூர்பேட்டை சாலை மற்றும் தண்டராம்பட்டு சாலை:-
கள்ளக்குறிச்சி, அருர், சேலம், தண்டராம்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து தண்டராம்பட்டு சாலை வழியாக வரும் பேருந்துகள் தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று SK steel எதிரில் உள்ள (காலி இடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும். பின்னர், மணலூர்பேட்டை சாலையில் உள்ள ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி தண்டராம்பட்டு சாலையை அடைந்து தங்களது ஊர்களுக்கு செல்லும்
தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய ஊர்கள் வழியாக வரும் பேருந்துகள் மணலூர்பேட்டை சாலையில் திருவண்ணாமலை அருகில் உள்ள ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி மம்மிடாடி திருமண மண்டபத்தின் வலது புறம் திரும்பி தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று SK Steel எதிரில் உள்ள (காலி இடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்துசேரும் பின்னர், காட்டாம் பூண்டி மற்றும் மணலூர் பேட்டை வழியாக தங்களின் ஊர்களுக்கு செல்லும்.
செங்கம் சாலை:-
பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குப்பம். KGF ஆகிய வழித்தட பேருந்துகள் கிரிவலப்பாதை அருகில் உள்ள அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்லும் பேருந்துகள் அதிகமாகும் போது அருகில் உள்ள கங்கையம்மன் கோவில் (காலியிடம்) மற்றும் சுபிக்ஷா கார்டன் அருகி தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். தேவைப்படும் பொழுது அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அனுப்பப்படும்.
காஞ்சி சாலை:-
புதுப்பாளையம், காஞ்சி, கடலாடி, மேல்சோழங்குப்பம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆடையூர் Don Bosco சிகரம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்.
திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள கார் நிறுத்தும் இடங்களை எளிதில் கண்டறிய https://tvmpolicedeepam2023.com/ என்ற வலைதளத்தையும் மேலும் காவலர் அவசர உதவிக்கு 044-28447703, 044 - 28447701 மற்றும் 8939686742 ஆகிய எண்களையும் குழந்தைகள் காணாமல் போவது சம்மந்தமான உதவிக்கு 9342116232 8438208003 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.