நீங்கள் விரும்பும் நிறத்திற்கு வண்டி வாங்கி ஓடாதீங்க! துரதிர்ஷ்டம் விலகாது..ராசிப்படி ஓட்டுங்க!

By Kalai Selvi  |  First Published Nov 25, 2023, 2:05 PM IST

உங்கள் ஜன்ம கிரகத்தின் குணங்களுக்கு பொருந்தாத நிறத்தில் வாகனங்களை நீங்கள் ஓட்டினால், துரதிர்ஷ்டம் மற்றும் நோய் தாக்கும்.


நிறங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி நிறங்களும் அதிர்ஷ்டத்தைத் தருகின்றன. நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர வேண்டும் அல்லவா? ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு, குறிப்பிட்ட கிரகங்கள் ஜாதகத்தை ஆள்கின்றன. இந்த ஜாதக கிரகங்களுக்கு சில நிறங்கள் சாதகமாகவும் சில சாதகமற்றதாகவும் இருக்கும். அப்படி இல்லாமல் நீங்கள் உங்கள் இஷ்ட நிறத்திற்கு வாகனங்களை வாங்கி ஓட்டினால் துரதிர்ஷ்டம் மற்றும் நோய் ஏற்படும். எனவே உங்க ராசி படி என்ன நிறத்தில் வண்டி வாங்கி ஓட்டுவது நல்லது என்று இங்கு பார்க்கலாம்.

மேஷம்: மேஷம் நெருப்பு போன்றது. அதிக ஆற்றல், அதிக விரக்தி. எனவே கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு நிற வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இவை விரக்தியை அதிகரிக்கின்றன. சிவப்பு, ஊதா, மஞ்சள், மெரூன் நிறங்கள் உங்களுக்கு சாதகமானவை.

Tap to resize

Latest Videos

ரிஷபம்: இவர்கள் ஒரு நிலையான, யதார்த்தமான பார்வை மற்றும் தைரியம் கொண்டவர்கள். ஊதா நிற வாகனங்களை ஓட்டக்கூடாது என்று கூறப்படுகிறது. கருப்பு, பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் இவர்களுக்கு பொருத்தமானவை.

மிதுனம்: இவர்கள் எதையும் அலசாமல் நோக்கிச் செல்வதில்லை. புத்திசாலியும் கூட. அவர்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற வாகனங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மஞ்சள், வெளிர் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:   ஏழு நாளின் அதிர்ஷ்ட நிறத்தை தெரிஞ்சு டிரஸ் போடுங்க.. சுப பலன்கள் கிடைக்கும்!

கடகம்: இவர்கள் மிகவும் உணர்திறன் கொண்டவர்கள். மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர்கள். மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். எனவே, இவர்கள் கருப்பு, வெளிர் ஊதா நிறத்தை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வெள்ளை, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் இவர்களுக்கு ஏற்றது..

இதையும் படிங்க:  கன்னி ராசி பெண்களே "இந்த" நிறத்தில் வளையல்கள் போடுங்க...அப்புறம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் பாருங்க!

சிம்மம்: இவர்கள் வண்ணமயமானவர்கள், மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள், கவர்ச்சியானவர்கள் மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள். வெளிர் இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பழுப்பு, ஊதா, தங்கம் மற்றும் ஆரஞ்சு நிறம் இவர்களுக்கு சிறந்தது.

கன்னி: இவர்கள் ஒரு நடைமுறை சிந்தனையாளர். நன்றாக பகுப்பாய்வு செய்பவர். பல திறமைகள் கொண்டவர். இவர்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்கவும். பச்சை, கருப்பு, சாம்பல் மற்றும் பீச் வண்ணங்களைப் பயன்படுத்துவது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

துலாம்: இவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துவார்கள். இந்த ராசிக்காரங்க பிரகாசமான நியான் நிறங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். கிரீம், நீலம், கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் இவர்களுக்கு சிறந்தது.

விருச்சிகம்: மற்றவர்களை எளிதில் பாதிக்கும் ராசி. ஆழ்ந்த உணர்வுகள் கொண்டவர்கள். இவர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. மெரூன், ஊதா, மாதுளை நிறம், கருப்பு வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

தனுசு: இவர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பார்கள். சாகசங்கள் செய்யும் திறன் கொண்டவர்கள். இவர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற வாகனங்களை தவிர்க்க வேண்டும். ஊதா, பழுப்பு, கலப்பு நிற வாகனங்கள் சிறந்தது. 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். மஞ்சள், ஊதா மற்றும் நியான் நிறங்கள் வேண்டாம். கருப்பு, சாம்பல், அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் சிறந்தது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் நல்ல அறிவும் நட்பும் கொண்டவர்கள். ஆரஞ்சு, தங்கம், நீலம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வெள்ளி, நீலம் ஆகிய வண்ண வாகனங்களை ஓட்டலாம்.

மீனம்: இவர்கள் நல்ல உணர்வுகளுடன், கனிவான மற்றும் திறந்த இதயம் உடையவர்கள். சிவப்பு மற்றும் அடர் நீல நிறங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. லாவெண்டர், வெள்ளை, நீலம், பீச் நிறங்கள் அவர்களுக்கு ஏற்றது.

click me!