
முருகனின் அருளை தரும் கந்தசஷ்டி விரதம்
கந்தசஷ்டி விரதம், முருகப் பெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதியை மகாகந்தசஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை முழு நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்ந்து, வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விரதத்தில், காலை மற்றும் மாலை வேளைகளில் குளித்து, முருகனுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும். முருகனின் திருநாமத்தை மனதில் நினைத்து, அவரது சிந்தனையில் மூழ்கி இருக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் மந்திரங்களை உச்சரித்து, சட்கோண தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.
இரண்டாம் நாள் வழிபாடு
கந்தசஷ்டியின் இரண்டாம் நாளில், திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவோர் முருகனிடம் வேண்டிக்கொள்ளலாம். இந்த நாளில், சட்கோண தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் புண்ணியமானது. நெய்யைப் பயன்படுத்தி இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடலாம். இதனால் திருமணத் தடைகள் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
நைவேத்தியம்: தேங்காய் சாதம் அல்லது பருப்பு பாயசம்.
விரதம் இருப்பவர்கள் முருகனுக்கு படைத்த நைவேத்தியங்களை சாப்பிடலாம். ஆனால், குறைந்த அளவில் உணவு எடுத்து விரதத்தைத் தொடரலாம். பால், பழம், பிரசாதம் போன்றவற்றை சிறிதளவு உட்கொள்வது தவறில்லை.
தானம் செய்ய வேண்டியவை
இரண்டு சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி போன்ற மங்கலப் பொருட்களை தானமாக வழங்க வேண்டும். இந்த தானம் திருமணம் நடைபெறவும், கணவன்-மனைவி உறவு பலப்படவும், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி கிடைக்கவும் உதவும். இந்தப் பொருட்களை கோயிலுக்கு எடுத்துச் சென்று, சுமங்கலி பெண்களிடம் வழங்கி, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
திருமணம் நடைபெற உச்சரிக்க வேண்டிய திருப்புகழ் பதிகங்கள்
கந்தசஷ்டியின் இரண்டாம் நாளில் திருமணம் நடைபெற வேண்டி உச்சரிக்கப்பட வேண்டிய திருப்புகழ் பதிகங்கள்:
திருப்புகழ் 1:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்தமிகவானி லிந்து வெயில்காயமிதவாடை வந்து தழல்போல வொன்றவினைமாதர் தந்தம் வசைகூறகுறவாணர் குன்றி லுறைபேதை கொண்டகொடிதான துன்ப மயல்தீரகுளிர்மாலை யின்க ணணிமாலை தந்துகுறைதீர வந்து குறுகாயோமறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்துவழிபாடு தந்த மதியாளாமலைமாவு சிந்த அலைவேலை யஞ்சவடிவேலெ றிந்த அதிதீராஅறிவால றிந்து னிருதாளி றைஞ்சுமடியாரி டைஞ்சல் களைவோனேஅழகான செம்பொன் மயில்மேல மர்ந்துஅலைவாயு கந்த பெருமாளே.
திருப்புகழ் 2:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதேநீவந்த வாழ்வைக்கண் டதனாலேமால்கொண்ட பேதைக்குன் மணநாறும்மார்தங்கு தாரைத்தந் தருள்வாயேவேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனேவீரங்கொள் சூரர்க்குங் குலகாலாநாலந்த வேதத்தின் பொருளோனேநானென்று மார்தட்டும் பெருமாளே.
முருகனின் அருளைப் பெற உச்சரிக்க வேண்டிய பதிகம்:
“விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்தபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.”
இந்தப் பதிகத்தை தினமும் உச்சரிப்பவர்களுக்கு முருகனின் அருள் எப்போதும் துணையாக இருக்கும். இது மனதில் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். விரதம் இருப்பவர்களும், வழிபடுபவர்களும் இந்தப் பாடலைப் பாடி முருகனின் பேரருளைப் பெறலாம்.