காஞ்சிபுரம் பக்தர்கள் சார்பாக பருவதமலை அடிவாரத்தில் வைப்பதற்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவாக்கப்பட்ட சிவ லிங்க சிலை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துக் கொண்டு செல்லப்பட்டது.
இந்து மதத்தில் பல்வேறு தெய்வங்கள் இருப்பினும் அழிக்கும் தொழிலை புரியும் சிவபெருமானை பலரும் மனமுருகி வழிபாடு செய்வதை பார்த்து வருகிறோம். சிவனின் நாமத்தை கூறினாலே போதும் நமது மனம் ஒரு நிலை அடைந்து விடும் என்பது பலரும் உணர்ந்த ஒன்றாகும். அப்படிப்பட்ட சிவபெருமானின் திருத்தலங்கள் தமிழகம் மட்டுமல்லாது நமது பாரதம் முழுதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. உதாரணமாக காசி,சோம்நாத் ,ராமேஸ்வரம் என்று சொல்லிக்கொண்டே சொல்லலாம். இப்படியான சிவபெருமானுக்கு காஞ்சிபுரம் மக்கள் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் இனைந்து சிவலிங்கத்தை உருவாக்கி அதனை பர்வதமலை அடிவாரத்தில் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பக்தர்கள் சார்பாக பருவதமலை அடிவாரத்தில் வைப்பதற்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவாக்கப்பட்ட சிவ லிங்க சிலை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துக் கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தென் மகாதேவ மங்கலம் ஆகிய இரு கிராமங்களுக்கு நடுவில் ஏறக்குறைய 5500 ஏக்கர் பரப்பளவில் இந்த பருவதமலை அமைந்துள்ளது.
மலையின் உச்சியில் ஸ்ரீ மல்லிகார்ஜூனர் உடனுறை பிரமராம்பிகை திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் இருக்கும் சிவனை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்த கோடிகள் தமிழக பகுதிகளிலும் இருந்து வந்து போவார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல பக்தர்கள் திரளாக கலந்து பருவதமலைக்கு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த முறை பருவத மலைக்குச் செல்கின்ற காஞ்சிபுரம் பக்தர்கள் அனைவரும் இனைந்து பருவதமலைக்கு கோடி ருத்ராட்ச தியான டிரஸ்ட் மூலமாக பருவத மலையின் அடிவாரத்தில் பிற பகுதிகளில் வரும் பக்தர்களின் பார்வைக்காக வைக்க கடந்த 10 நாட்களாக 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் சிவலிங்கத்தை செய்துள்ளனர்.
இப்படி உருவான சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்து மேள தாளம் வாத்தியங்கள் முழங்க செய்து ஊர்வலமாக காஞ்சிபுரத்தின் 4 ராஜ கோபுர வீதிகளிலும் வீதி உலா எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு பின் ருத்ராட்ச லிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபாடு செய்தார்கள்.
பின்னர் இந்த ருத்ராட்ச சிவலிங்கத்தை பருவதமலைக்கு எடுத்து செல்லும் வழி முழுவதும் உள்ள பகுதிகளில், பக்தர்கள் தரிசித்து வணங்கும் வகையில் ஆங்காங்கே பூஜைகள் ,தீப ஆராதனைகள் காண்பித்து மக்கள் பெரு வெள்ளம் வழிபாடு செய்தனர்.
இறுதியாக இந்த ருத்ராட்ச சிவலிங்கம் பர்வத மலை திருக்கோவிலில் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.