சென்னை இஸ்கான் கீதா மகாத்ம்யம் இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு, வரும் 7 நாட்களில் நடைபெறும்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சென்னை கீதா மஹாத்ம்யம் இலவச ஆன்லைன் சான்றிதழ் பாடத்தை நடத்துகிறது. இந்த வகுப்புகள் 22 ஏப்ரல் 2024 அன்று தொடங்கி 28 ஏப்ரல் 2024 அன்று முடிவடைகிறது.
இந்த கீதா மஹாத்ம்யம் இலவச ஆன்லைன் வகுப்பானது வேறும் 7 நாட்கள் மட்டுமே நடத்த உள்ளதாக இஸ்கான் சென்னை கோயில் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படிங்க: இஸ்கான் கோயிலில் வெகு விமரிசையாக நடந்து முடிந்த 'கௌரா பூர்ணிமா'
தினமும் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த வகுப்பு ஆனது இரவு 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவடையும். மேலும் இந்த வகுப்பு ஆங்கிலம் மற்றும் தமிழில் எளிதான பாடநெறி கற்பிக்கப்படும். ஸ்ரீமத் பகவத் கீதையைப் படிப்பதன் மகிமைகள் மற்றும் நன்மைகளைப் பற்றி இது பேசுகிறது.
இதையும் படிங்க: கிருஷ்ண பக்தர்களுக்கு குட் நியூஸ்! 25 மார்ச் அன்று கௌர பூர்ணிமா விழா... கிருஷ்ணர் அருளைப் பெற்று மகிழுங்கள்!
படிப்பை முடித்த பிறகு பங்கேற்பாளர்களுக்கு முடிந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 73585 11132 என்ற வாட்ஸ்அப் எண்ணை அழைக்கவும். மேலும், https://www.iskconchennai.com எனும் இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D