குளவிகள் வீட்டில் கூடு கட்டினால் நல்ல சகுனமா இல்லை கெட்ட சகுனமா? ஆன்மீகத்தில் இதுகுறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
குளவிகள் வீட்டில் கூடு கட்டினால் நல்ல சகுனமா இல்லை கெட்ட சகுனமா? ஆன்மீகத்தில் இதுகுறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக வீடுகளில் அல்லது வீட்டின் அருகில் தேன்கூடு இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். இதனால் தேன் கூடு இருந்தால் அபசகுணம் என்று கருதப்படுகிறது. ஆனால் வீட்டில் குளவி கூடு இருந்தால் மிகவும் நல்லதாம். ஏனெனில் தூய்மையான மண்ணை கொண்டு மிகவும் கவனமாக குளவி கூடு கட்டுமாம். மரத்தில் இருந்து மரத்தூளை கொண்டு வந்து, பற்களால் கடித்து அதனை மென்மையாகி, அதில் தனது எச்சிலை கலந்து தான் குளவி கூடு கட்டுமாம். அறுகோண வடிவில் கட்டும் இந்த கூட்டில் அறைகளை அமைக்கும் குளவி ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு முட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாம்.
undefined
இனப்பெருக்கத்திற்காக குளவி கூடு கட்டும் என்பதால் வீட்டில் கூடு கட்டுவதால் திருமணமாகதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டின் நிதி ஆதாயமும் சீராக இருக்குமாம். கடன் வாங்கி இருந்தாலும் அதை எளிதில் திருப்பி அடைக்க முடியுமாம். அதே போல் கடன் கொடுத்திருந்தாலும் அந்த பணம் சிரமமின்றி கிடைக்குமாம்.
ஸ்ரவண மாதம்.. உங்க கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
மேலும் பூஜை அறையில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. அதுவும் வடகிழக்கு மூலையில் குளவி கட்டினால் பல நன்மைகள் கிடைக்குமாம். எனவே இந்த கூட்டை எக்காரணம் கொண்டும் கலைக்கக் கூடாது.
ஆனால் சமையலறையில் குளவி கூடு கட்டினால் அது அபசகுணமாக கருதப்படுகிறது. நிதி ஆதாரம் குறைந்து வறுமை சூழல் ஏற்படுமாம். மேலும் புதிதாக ஒரு கூட்டை கட்டி அதிலிருந்து குளவி வெளியேறிவிட்டால் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் வரும் என்று அர்த்தமாம். இதனால் அந்த கூட்டை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
குளவி விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் குளவி எதிர்பாராமல் கொட்டிவிட்டால் அதன் விஷம் உடல் முழுவதும் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளவி கொட்டிய இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவினால் விஷம் ஏறாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் குளவி கூடு கட்டினால் அதை கலைத்துவிடுவது நல்லது. அந்த இடத்தில் கோமியத்தை தெளித்தால் குளவி மீண்டும் கூடு கட்டாது.