கல்யாண வரம் தரும் ஆடிப்பூர விரதம்; ஆண்டாளை வணங்கினால் கெட்டி மேளச்சத்தம் கேட்கும்!!

By Asianet Tamil  |  First Published Aug 1, 2024, 12:50 PM IST

ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடி மாதத்தில் பூர நட்சத்திர நன்னாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும், அம்பிகையை வணங்கி வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணமான பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  
 


ஆண்டாள் அவதார தினம்:
ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே  ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்.  ஆடிப்பூரம் தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாக பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்.  எம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

திருமண வரம்:
ஆண்டாளின் அவதார தினம் பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் என்று ஆன்மீக ஐதீகம் உண்டு. இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தை, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையான தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  5ஆம் நாள் திருவிழாவான ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று கருட சேவையும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும்.

ஆடி அமாவாசை 2024 எப்போது? இந்த 1 எளிய தானம் செய்ங்க.. இனி அதிஷ்டம் தான்!

Tap to resize

Latest Videos

undefined

சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்:
இத்திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தின்போது பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் காட்சியளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமாளையே கணவனாக நினைத்து மாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளை ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும் ஆனந்தமான வாழ்வு அமையும்.

பிரிந்த தம்பதியர் ஒற்றுமை
சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்கள், தொழில் போட்டியால் பிரிந்த கூட்டாளிகள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள்.

அம்மன் அவதரித்த தினம்
உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவார்கள்.  தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

ஆகஸ்ட் 2024 : முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள்.. முழு விவரம் இதோ

அம்மனுக்கு வளைகாப்பு
உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆடிப்பூரம் நாளில் அம்மனையும் ஆண்டாளையும் தரிசனம் செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

click me!