வீட்டில் சரியான திசையில் செடிகளை நடுவது மகிழ்ச்சியை கொடுக்கும். எனவே, வாஸ்துபடி செடிகளை வைத்தால் அவை நிதி நன்மைகளை அளிக்கின்றன.
வாஸ்து படி, வீட்டில் நடுவதற்கு மங்களகரமானதாகக் கருதப்படும் பல தாவரங்கள் உள்ளன, மேலும் சில செடிகளை வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பது நல்லது. இதனால் விட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். எனவே, நீங்கள் செடிகளை சரியான திசையில் நட்டு வீட்டில் வைத்தால், அவை நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
அத்தகைய தாவரங்களில் ஒன்று தான் பாம்பு செடி. வீட்டின் அலங்காரத்தை அதிகரிக்க இந்த செடியை வரவேற்பறையிலோ அல்லது வீட்டின் வேறு எந்த இடத்திலோ வைத்திருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இந்த செடியில் பல நன்மைகள் உள்ளதால் நாம் நம்முடைய வீட்டில் இந்த செடியை நடுகிறோம். மேலும் இது காற்றை சுத்தப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் வாஸ்து பற்றி பேசினால், இந்த செடியை வீட்டில் நடுவது சரியா? இதைப் பற்றி விரிவாக இங்கு அறிந்து கொள்வோம்.
undefined
வாஸ்து படி வீட்டில் பாம்பு செடி நடலாமா?
நீங்கள் வாஸ்துவை நம்பினால், உங்கள் வீட்டில் சில சிறப்பு இடங்களில் பாம்பு செடி நடலாம். அது செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக, பாம்பு செடியை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நடலாம். இந்த செடி வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது மற்றும் எதிர்மறையை அகற்ற உதவுகிறது. வாஸ்து படி, படுக்கையறையில் இந்த செடியை நடுவது நல்லதாக கருதப்படுகிறது. இதன் மூலம் கணவன்-மனைவி இடையே நல்லுறவு நிலவும், பரஸ்பர சச்சரவுகள் தவிர்க்கப்படும். அதுபோல் இந்த செடியை நீங்கள் வரவேற்பறையில் அலங்காரமாக நடலாம். மேலும் இந்த செடியை எப்போதும் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்தால், அது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீது அதன் முழு தாக்கத்தை ஏற்படுத்தும்.
பாம்பு செடியை வீட்டில் எந்த இடத்தில் வைப்பது நல்லது?
வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் அல்லது ஹாலில் ஒரு பாம்பு செடியை நடலாம். இது முழு வீட்டிலும் நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் ஹால்
பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் கூடும் வீட்டின் மைய இடமாகக் கருதப்படுகிறது. எனவே, அந்த இடத்தில் இந்த செடியின் இருப்பு வரவேற்பு சூழ்நிலையை உருவாக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் இந்த செடி இருந்தால் போதும், தொலைந்துபோன பணம் உங்களுக்கு கிடைக்கும்..!!
அதுபோல் இந்த செடியை வாஸ்துபடி, படுக்கையறையிலும் வைக்கலாம். ஏனெனில் இது அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உறவுகளை ஆழப்படுத்துகிறது. இருப்பினும், இந்த செடியை படுக்கைக்கு அருகில் வைக்க வேண்டுமே தவிர, படுக்கைக்கு முன்னால் இல்லை. இது உங்களுக்கு அமைதியான சூழலை வழங்க உதவுகிறது.
இதையும் படிங்க: உங்க வீட்டில் இருந்தால் இந்த செடிகள் இருந்தால்.. பணம் தன்னால வரும்.. அதிர்ஷ்ட மழை பொழியும்..
வீட்டில் படிக்கும் அறையில் பாம்பு செடியை வைக்கலாமா?
உங்கள் வீட்டில் வேலை செய்யும் இடத்தில் அல்லது படிக்கும் அறையில் பாம்பு செடியை நடலாம். ஏனெனில், அது நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது. மேலும் இது செல்வத்தின் காரணியாகவும் கருதப்படுவதால், அது உங்கள் நிதி நிலையை நன்றாக வைத்திருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வீட்டில் பாம்பு செடியை நட சரியான திசை?
வாஸ்துபடி, பாம்பு செடியின் சரியான திசை வீட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகும். இந்த செடியை மேசை மீது வைப்பதை தவிர்க்கவும் மற்றும் வேறு எந்த உட்புற தாவரத்திற்கு அருகில் வைக்க கூடாது. மேலும் இந்த செடியை குளியலறையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பலர் குளியலறை அலங்காரத்திற்காக இந்த செடியை பயன்படுத்துகின்றனர், ஆனால் அது தவறு.
பாம்பு செடி வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கிறது:
பாம்பு செடியின் மேல்நோக்கி காணப்படும் இலைகளின் குறியீடு வளர்ச்சி மற்றும் செழிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செடி நேர்மறை வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த செடியை வீட்டில் நடுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் உருவாகி, எதிர்மறை சக்திகள் நீங்கும்.
வீட்டில் பாம்பு செடியை நடுவது எப்படி ?
நீங்கள் வாஸ்து படி பாம்பு செடியை நடுகிறீர்கள் என்றால், அதை எந்த மேசையிலோ அல்லது மற்ற மேற்பரப்பிலோ வைக்க வேண்டாம். இந்த செடியை எப்போதும் தரையில் வைத்திருப்பது நல்லது என்று கருதப்படுகிறது. நீங்கள் அதை நேரடியாக ஒரு தொட்டியில் அல்லது உங்கள் வீட்டின் தோட்டத்தில் நடலாம். இந்த செடியைச் சுற்றி வேறு எந்த செடியையும் நட வேண்டாம், இல்லையெனில் அதன் தன் முழு ஆற்றலையும் செலுத்த முடியாது. படிக்கும் அறையில் பாம்பு செடியை வைத்திருப்பது கவனம் செலுத்த உதவுகிறது. இந்த செடியை உங்கள் மேசையில் அல்லது ஜன்னலில் வைக்கலாம்.