வீட்டில் கண்ணாடி உடைந்தால் துர்சம்பவம் உண்டாகுமா ?

By Dinesh TG  |  First Published Sep 19, 2022, 6:07 PM IST

நம்பிக்கை வைக்கப்பட்ட கண்ணாடி வீட்டில் தானாக உடைந்து விட்டால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? கண்ணாடி உடைந்தால் என்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
 


வீட்டில்  எப்போதும் நல்ல சக்திகள் நடமாட்டம் இருக்க வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விரத முறைகள் கடைப்பிடிக்க வேண்டும். பூஜைகள் இறைவனுக்கு தவறாமல் நடக்க வேண்டும். இப்படியான பல சம்பிரதாயங்களை நாம் கடைப்பிடித்துவருகிறோம். அதோடு வீட்டில் இருக்கும் பொருள்கள் லஷ்மியின் வசிப்பிடமாகவும் நாம் நினைத்து வருகிறோம். 

உண்மையில் ஒவ்வொரு பழங்கால பொருட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களை பிரதிபலிக்கின்றன. அந்த வகையில் தான் முகம் பார்க்கும்  கண்ணாடி என்னும் பொருள் பல நம்பிக்கைகளோடு பிணைய பட்டுள்ளன.  வாசலில் கண்ணாடி மாட்டி இருந்தால் தங்கள் வீட்டிற்கு நுழைவதற்கு முன்பு அவர்களது முகத்தை பார்த்து உள் நுழைந்தால்  அவர்கள் மனதில் துஷ்ட எண்ணங்கள் இருந்தாலும் அது வீட்டிலிருப்பவர்களை தாக்காது என்று சொல்வார்கள். 

Tap to resize

Latest Videos

அப்படி நம்பிக்கை வைக்கப்பட்ட கண்ணாடி வீட்டில் தானாக உடைந்து விட்டால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? கண்ணாடி உடைந்தால் என்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம். கண்ணாடி சாதாரணமாகவே தானாக தவறி கீழே விழுந்து உடைந்து விட்டால் பெரும் துரதிர்ஷ்டம் வரும் என்கிற கருத்து மக்களிடையே இருக்கிறது. இந்த துரதிருஷ்டம் 7 ஆண்டுகள் வரை கூட தொடரும் என்றும் கூறப்படுகிறது! இதற்கு முந்தைய காலங்களில் விலை உயர்ந்த பொருட்களாக இருந்த இந்த கண்ணாடி பெரிய பெரிய அரண்மனைகளிலும், அலுவலகங்களிலும் மட்டும் தான் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வேலை செய்யக்கூடிய யாராவது கைத்தவறி கவனக் குறைவின் காரணமாய் கண்ணாடிப் பொருட்களை போட்டு உடைத்து விட்டால் அந்த அரசரோ அல்லது அரசு அதிகாரிகளோ.. அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிப்பார்களாம். எனவே கண்ணாடியை பொருத்தவரை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்று கூறப்பட்டது. காலப்போக்கில் இது மருவி கண்ணாடி உடைந்தால் 7 வருடம் துரதிஷ்டம் தொடரும் என்றே ஆகிவிட்டது.

அதேபோன்று கண்ணாடி திடீரென கீழே விழுந்து உடைந்தால் அந்த வீட்டில் துர் சம்பவங்கள் அல்லது துர் மரணங்கள் நிகழும் என்கிற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. அது மட்டுமின்றி வீட்டில் ஒருவர் இறந்து போய்விட்டால் அவருடைய அறையில் இருந்த கண்ணாடியில் அவருடைய ஆத்மா நுழைந்து விடும், இதனால் அதனை மூடி வைத்திட வேண்டும் என்றெல்லாம் தெரிவிப்பார்கள். அந்த கண்ணாடியில் நாம் நம் முகத்தை பார்த்தால் நாமும் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கையும் இருந்தது.

திருஷ்டி சுற்றுவதன் காரணம் தெரியுமா?

 அந்தக் காலத்தில் எல்லாம் அவ்வளவாக தொழில் நுட்ப வளர்ச்சியே கிடையாது. திடீரென ஏற்படும் நில அதிர்வுகள் மூலமாக கண்ணாடிகள் உடைந்தும் அதனால் மக்கள் இறப்பதும் நடந்து இருக்கக்கூடும். இதனால் தான் கண்ணாடி உடைந்தாலே மரணம் நிகழும் என்கிற பயம் உருவாகி இருக்கக்கூடும். கண்ணாடியினால் ஒளியை பிரதிபலிக்கத்தான்  செய்ய முடியுமே தவிர அதனை உள்வாங்க முடியாது அதனால் அனைவரும் சொல்லும்படி கண்ணாடிக்குள் மனித ஆத்மா நுழைவது என்பது சாத்தியமே இல்லாத ஓன்று.  

பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன் என்ன காரணம்?

இறந்தவர்களுடைய வீட்டில் திடீரென காற்றில் அசைந்து உடையும் கண்ணாடிக் கூட இறந்தவரின் ஆத்மா வந்து உடைத்து விட்டது என்று நம்பி வருகின்றனர்.  காலப்போக்கில் இவை தான் வெவ்வேறு விதமாக பரவி கண்ணாடியின் மீதான நம்பிக்கைகளுடன் இவற்றை தொடர்புபடுத்திக் இவ்வாறான பலன்கள் கூறப்பட்டுள்ளது. அதனால் இத்தகைய மனசஞ்சலங்களுக்கு எப்போதும் இடம் கொடுக்காதீர்கள். 

click me!