செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பிறருக்கு பணம் கொடுத்து உதவுவது நல்லதா? கெட்டதா?

By Kalai Selvi  |  First Published May 8, 2023, 10:22 AM IST

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பிறருக்கு பணம் கொடுத்து உதவுவது நல்லதா? இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.


பிறருக்கு உதவி செய்வது என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று ஆகும். பொதுவாக இப்படி  ஒருவருக்கொருவர் உதவி செய்வதை  எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் ஜோதிடத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிறருக்கு பணம் கொடுத்து உதவுவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.

ஜோதிட படி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செவ்வாய் முருகன் பெருமாளுக்கும், வெள்ளி லட்சுமி தேவிக்கும் உள்ள நாட்களாகும். இந்த இரண்டு நாட்களிலும்  தெய்வங்கள் நமக்கு எல்லா செல்வங்களையும் கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. மேலும் அந்த நாட்களில் செல்வங்கள் அனைத்தும் நம்மிடம் தான் இருக்க வேண்டும். அது  நம்மிடமிருந்து வெளியே சென்றால் நிரந்தரமாக செல்வம் நம்மை விட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடும் என்று மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இதனால் தான் மக்கள் இந்த இரண்டு நாட்களில் பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து வருகிறார்கள். மேலும் இந்த இரண்டு நாட்களில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற காரணங்களுக்காக வீட்டில் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாது என்ற ஐதிகமும் இருக்கிறது.

இதையும் படிங்க: பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று... ஒரே நாளில் நீங்க! இந்த 7 விதமான வீட்டு வைத்தியம் உதவும்!

மேலும் நம் வீட்டில் செல்வங்கள் பெருக  வேண்டுமென்றால் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்ற வேண்டும். அதனை தொடர்ந்து பிரம்ம முகூர்த்தமான அதிகாலை நான்கு முதல் ஐந்து மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். பணம் கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படியில் நின்று கொண்டு நின்று கொடுக்கக் கூடாது மற்றும் வாங்கக்கூடாது. வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே வாசல் படியை தாண்டி கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாம். குறிப்பாக இரவில் கூட்டிய குப்பைகளை வீட்டிலிருந்து வெளியே தள்ளக்கூடாது. வீட்டில் ஏற்றிய குத்து விளக்கு தானாக அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஊதி அணைக்காமல் பூக்களை கொண்டு அணைப்பது நல்லது.

click me!