அஷ்டமியன்று விரதம் மேற் கொள்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை இந்த பதிவில் .காணலாம்
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான கஷ்டங்கள் ஏற்படும் போது இரியவனை மட்டுமே நம்பி மனதார பிரார்த்தனை செய்வோம். அப்படி நமக்கு கஷ்டங்கள் உண்டாகும் போது சோர்ந்து போகாமல் , துவண்டு விடாமல், சிவபெருமானின் அம்சமாக இருக்கும் பைரவரை வழிபட்டு ஆபத்துகள் மற்றும் கஷ்டங்கள் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற அஷ்டமி தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூஜை செய்வதே அஷ்டமி விரதமாகும். அஷ்டமி எனில் 8 வது திதியாகும். அதிலும் குறிப்பாக தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அஷ்டமி தினத்தில் விரதம் மேற் கொள்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை இந்த பதிவில் .காணலாம்
அஷ்டமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமான வழிபாடாகும். தேய்பிறை அஷ்டமி எனில் மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு என்றே கூறலாம். அதிலும் செவ்வாய்க் கிழமையன்று தேய்பிறை அஷ்டமி வந்தால் கூடுதல் விசேஷமாகும். அத்தகைய நாளில் பைரவரை வணங்கி வந்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறுவுவேறும் என்பது ஐதீகம்.
சூத முனிவர் நைமி சாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதமே அஷ்டமி விரதம். அதோடு சகல செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தரும் விரதம் தான் அஷ்டமி விரதமாகும். உடல் ஆரோக்கியதத்துடன் எந்த வித நோய்களின்றி வாழ விரும்புபவர்கள் அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.
சனீஸ்வரனின் குருவாக உள்ளவரும், காலத்தை கட்டுப்படுத்தும் தேவனாகவும் இருப்பவர் தான் பைரவர். 12 ராசிகளையும்,அஷ்ட திக்குகளையும் , பஞ்ச பூதங்களையும், நவகிரகங்களையும் கண்காணிப்பவர் தான் கால பைரவர்.
புனித நகரமான காசி நகரம் முழுதும் பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாக கூறப்படுகிறது . 8 தேய்பிறை அஷ்டமி நாட்களில் விரதம் மேற்கொண்டு பைரவரை வழிபாடு செய்து வர அனைத்து துன்பங்களும் விலகி வாழ்க்கையில் மங்கலம் ஏற்படும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.
பைரவ வழிபாடு:
தேய்பிறை அஷ்டமி திதியன்று பைரவருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, அகல் விளக்கில் நெய் ஊற்றி ஏற்றி, வடைமாலை சாற்றி, சிவப்புநிற பூக்களால் அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் பாதியாக வெட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால்
நீங்களும் அஷ்டமி தினங்களில் விரதம் இருந்து பைரவரை வழிபாடு செய்யுங்கள் தவிர தினமும் கால பைரவர் வழிபாடு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாறும்.