எல்லா செல்வங்களும் நம் வீடு தேடி வர, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நம்பிக்கையோடு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்... வெட்டி வேர் இருந்தால் போதும்.
மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்தால் செல்வமும் நம் வீட்டில் நிறைந்து இருக்கும். சுத்தமான வாசனை உள்ள இடங்களில் தான் மகாலட்சுமி குடியிருப்பார். அப்படியான வாசனை பொருள்களில் ஒன்றுதான் வெட்டிவேர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
கடையில் வெட்டிவேர் வாங்கி வந்து அதனை நன்கு காய வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை நீங்கள் நெற்றியில் பூசும் திருநீற்றில் கலந்து வையுங்கள். எந்த காரியமாக வெளியே சென்றாலும் நெற்றியில் பூசி செல்லுங்கள், வெற்றியே கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டு பூஜை அறையில் இந்த காரியத்தை செய்வதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்து, அதில் எலுமிச்சை பழத்தை போட வேண்டும். இதனுடன் வெட்டிவேரையும் சேர்த்து வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும், அப்போது எலுமிச்சை பழத்தையும் புதிதாக சேர்க்க வேண்டும். வெட்டிவேரை மாதம் ஒருமுறை மாற்றினால் போதும் இப்படி பூஜை அறையில் எப்போதும் வெட்டிவேரின் வாசனை நிரம்பி இருந்தால் மகாலட்சுமியின் அருளும் உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும் வீட்டில் செல்வம் சேரும்.
இதையும் படிங்க: தினமும் தூங்கும் முன்பு இதை செய்யுங்கள்.! உங்களுக்கு அதிர்ஷ்டமும், நிம்மதியும் பெருகும்..
செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் வெட்டிவேர் பொடியை போட்டு கொள்ளுங்கள். தூய்மையான வேப்பிலை இணுக்குகளை 5 எண்ணம் போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இந்த நீரை வீடு முழுக்க தெளித்து விடுங்கள் இப்படி செய்வதால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி, நேர்மறை ஆற்றல் பெருகும். வீட்டில் உள்ள துன்பங்கள் மறைந்து இன்பம் பெருக்கெடுத்து ஓடும்.
வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக மகாலட்சுமியின் அருள் இருக்க வேண்டும். நம் வீட்டு நிலை வாசலில் வெட்டிவேரில் தோரணம் செய்து தொங்கவிட்டால், மகாலட்சுமிக்கு வீடு தேடி வருவார் என்பது ஐதீகம். நம்பிக்கையுடன் இந்த விஷயங்களை செய்து பாருங்கள். நிச்சயம் மகாலட்சுமி அருளை பெறுவீர்கள். வெட்டிவேர் ரொம்ப வாசனை வாய்ந்தது. ஆனாலும் இதை ஒரு மாத காலம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இதனுடைய வாசனை பலன்கள் எல்லாம் 1 மாதம் தான் இருக்கும். வெட்டிவேரை கொண்டு எந்த விஷயம் செய்தாலும் 1 மாதம் மட்டுமே செய்ய வேண்டும் பின்னர் அதை மாற்றிவிட வேண்டும்.
இதையும் படிங்க: மே மாதத்தின் முக்கிய பண்டிகைகள், விரதம், ஆன்மீக விசேஷங்கள் பற்றிய முழுவிவரம்!